மீண்டும் மகாநதி தொடரில் கமருதீன்!
மகாநதி தொடர் படப்பிடிப்புக்கு வந்த நடிகர் கமருதீன் குறித்து...
மகாநதி தொடரில் நடிகர் கமருதீன் மீண்டும் நடித்துள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மகாநதி தொடர் விரைவில் நிறைவடையவுள்ளது. இந்தத் தொடரின் இறுதிக்கட்ட காட்சிகள் விரைவில் ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.
மகாநதி தொடரில் குமரன் பாத்திரத்தில் நடித்து வருபவர் கமுருதீன். இவர் இந்தத் தொடரில், தன்னுடைய அழுத்தமான நடிப்பால் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
Advertisement
Advertisement
இந்தத் தொடரில் இவருக்கு ஜோடியாக ஸ்வேதா குமார் நடித்து வருகிறார். இவர்களின் இணைக்கு சமூக ஊடகங்களில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
இதனிடையே, பிக் பாஸ் - 9 நிகழ்ச்சியில் நடிகர் கமுருதீன் பங்கேற்கப்பதற்காக, மகாநதி தொடரில் இருந்து விலகினார்.
கமுருதீனுக்குப் பதிலாக, புதிய நடிகர் மாற்றப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கதையில் திடீர் திருப்பமாக கமுருதீன் மலேசியா செல்வதாக மாற்றப்பட்டது.
இந்த நிலையில், கமுருதீன் மீண்டும் மலேசியாவில் இருந்து வருவதுபோல உருவாக்கப்பட்டு கதை முடிக்கப்பட்டுள்ளது. இதனால் மகாநதி தொடரின் கடைசி நாள் படப்பிடிப்புக்கு, கமருதீன் வந்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.
இந்தத் தொடர் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வருவது குறிப்பிடத்தக்கது.
Actor Kamarudeen has acted in the Mahanadhi series again
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.