காவல்துறை அதிகாரியாக நடிக்கும் மகாநதி சீரியல் நாயகன்!
மகாநதி தொடரில் நாயகனாக நடித்த சுவாமிநாதன் அனந்தராமன், புதிய தொடரில் காவல் துறை அதிகாரியாக நடிக்கவுள்ளது குறித்து...
மகாநதி தொடரில் நாயகனாக நடித்த சுவாமிநாதன் அனந்தராமன் புதிய தொடரில் காவல் துறை அதிகாரியாக நடிக்கவுள்ளார்.
காற்றின்மொழி, வேலைக்காரன், ஈரமானரோஜாவே, சின்னதம்பி, சிவா மனசுல சக்தி உள்ளிட்ட தொடர்களை தயாரித்த டெலி ஃபேக்டரி இந்தத் தொடரையும் தயாரிக்கவுள்ளது.
தெலுங்கு மொழித் தொடர்களில் நடித்ததன் மூலம் சின்ன திரையில் அறிமுகமானவர் நடிகர் சுவாமிநாதன் அனந்தராமன். 2020 ஆம் ஆண்டு மிதுன ராசி என்ற தெலுங்கு மொழித் தொடரில் நடித்தார்.
Advertisement
Advertisement
இதில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து நுவ்வு நேனு பிரேமா என்ற தொடரில் நாயகனாக நடித்தார். காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்தத் தொடர் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.
இதில் பலதரப்பட்ட ரசிகர்களைக் கவர்ந்ததால், தமிழ் மொழியில் காற்றுக்கென்ன வேலி என்ற தொடரிலும் சுவாமிநாதன் நடித்திருந்தார். பின்னர் மகாநதி தொடரில் நாயகனாக நடித்து நட்சத்திர நடிகரானார்.
தமிழில் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளதால், அடுத்தடுத்து தமிழில் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது புதிய தொடர் ஒன்றில் நாயகனாக சுவாமிநாதன் நடிக்கிறார்.
காவல் துறை உடையில் இத்தொடருக்காக எடுக்கப்பட்ட புகைப்படங்களும் இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. இதனால், புதிய தொடரில் காவல் துறை அதிகாரியாக சுவாமிநாதன் நடிப்பார் எனத் தெரிகிறது.
இத்தொடரின் நாயகிகள் குறித்த அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. காற்றின்மொழி, வேலைக்காரன், ஈரமான ரோஜாவே, சின்னதம்பி, சிவா மனசுல சக்தி உள்ளிட்ட தொடர்களை தயாரித்த டெலி ஃபேக்டரி இந்தத் தொடரையும் தயாரிக்கவுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் இத்தொடர் ஒளிபரப்பாகவுள்ளது.
Mahanadhi serial lead actor plays a police officer
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.