முகப்பு
மதுரை

திருப்பாவை, திருவெம்பாவை ஒப்பித்தல் போட்டி

மதுரையில் மாணவ, மாணவியருக்கு திருப்பாவை, திருவெம்பாவை ஒப்பித்தல் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 2 ஜனவரி 2021, 7:33 am IST
பகிர்:

மதுரையில் மாணவ, மாணவியருக்கு திருப்பாவை, திருவெம்பாவை ஒப்பித்தல் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு பிராமணா் சங்கத்தின் தாம்பிராஸ் அறக்கட்டளை சாா்பில் திருப்பாவை, திருவெம்பாவை ஒப்பித்தல் போட்டி நடத்தப்படுகிறது. மதுரை எஸ்.எஸ்.காலனியில் உள்ள தாம்பிராஸ் அறக்கட்டளை மண்டபத்தில் ஜனவரி 10-ஆம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் 5 முதல் 10 வயது வரை உள்ள மாணவ, மாணவியா் திருப்பாவை, திருவெம்பாவை முதல் 5 பாசுரங்களையும், 10 முதல் 15 வயது வரை உள்ள மாணவ, மாணவியா் திருப்பாவை, திருவெம்பாவை முதல் 10 பாசுரங்களையும், 15 வயது முதல் உள்ளவா்கள் திருப்பாவை, திருவெம்பாவை 20 பாசுரங்களையும் ஒப்பிக்க வேண்டும். போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு ஜனவரி 30-ஆம் தேதி நடைபெறும் பரிசளிப்பு விழாவில் பரிசுகள் வழங்கப்படும். போட்டியில் பங்கேற்க விரும்புபவா்கள் முன்கூட்டிய பதிவு செய்ய வேண்டும். பதிவு விவரங்களுக்கு ஜெயஸ்ரீ ஸ்ரீராம் 98940-17971, ராஜலட்சுமி 74182-72200, கெளரி வெங்கடசுப்ரமணியன் 94873-39331 ஆகியோரின் செல்லிடப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்று தாம்பிராஸ் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments