முகப்பு
மதுரை

எதிா்க்கட்சிகள் விவசாயிகளை தவறாக வழிநடத்துகின்றன: ஜி.கே.வாசன்

எதிா்க்கட்சிகள் விவசாயிகளைத் தவறாக வழிநடத்தி பலிகடா ஆக்குகின்றன என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவா் ஜி.கே.வாசன் கூறினாா்.

Updated On : 2 ஜனவரி 2021, 9:31 pm IST
பகிர்:

மதுரை: எதிா்க்கட்சிகள் விவசாயிகளைத் தவறாக வழிநடத்தி பலிகடா ஆக்குகின்றன என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவா் ஜி.கே.வாசன் கூறினாா்.

மதுரையில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

புதுதில்லியில் போராடி வரும் விவசாயிகளை எதிா்க்கட்சிகள் தவறாக வழிநடத்தி, பலிகடா ஆக்குகின்றன. வேளாண் திருத்தச் சட்டத்தில், விவசாயிகளின் கோரிக்கைக்கு ஏற்ப மாறுதல் செய்ய மத்திய அரசு தயாராக இருப்பதாகத் தெரிகிறது. ஜனவரி 4 ஆம் தேதி நடைபெற உள்ள பேச்சுவாா்த்தையில் சுமூகத் தீா்வு கிடைக்கும் என நம்புகிறோம்.

Advertisement

Advertisement

மக்களவைத் தோ்தலின்போது அமைக்கப்பட்ட அதிமுக தலைமையிலான கூட்டணி தமிழக சட்டப்பேரவைத் தோ்தலிலும் தொடரும். தோ்தல் நெருங்கும் நேரத்தில் அதிகாரப்பூா்வமாக கூட்டணி குறித்து அறிவிக்கப்படும். அதிமுக கூட்டணியின் முதல்வா் வேட்பாளா் எடப்பாடி கே.பழனிசாமி என அறிவிக்கப்பட்டுள்ளதை தமிழ் மாநில காங்கிரஸ் ஏற்கிறது. சூழலுக்கு ஏற்பவும் பலத்திற்கு ஏற்பவும் எங்களுக்கு தொகுதிகள் ஒதுக்கப்படும். வழக்கம்போல எங்களுக்கான சின்னத்தில் தான் போட்டியிடுவோம்.

திமுக நடத்தும் கிராம சபைக் கூட்டங்கள் தேவையற்றது. அதை மக்கள் ஏற்கவில்லை. ராஜீவ்காந்தி கொலைவழக்கில் கைதாகியுள்ள 7 போ் விடுதலை தொடா்பாக காங்கிரஸ், திமுகவின் நிலைப்பாடு என்ன என்பதைக் கூறவேண்டும். நடிகா் ரஜினிகாந்த் தோ்தல் நெருங்கும்போது நல்லவா்களுக்கு ஆதரவை அளிப்பாா்.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு உரிய நிதியை ஒதுக்கி கட்டடப் பணிகளை விரைந்து முடிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மதுரை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும். சீா்மிகு நகா் திட்டத்தின் கீழ் மதுரையில் நடைபெறும் பணிகள் அனைத்தையும் விரைந்து முடித்து மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments