முகப்பு
மதுரை

மதுரை விமான நிலையத்துக்கு முத்துராமலிங்கத் தேவா் பெயரை சூட்ட முதல்வரிடம் கோரிக்கை மனு

மதுரை விமான நிலையத்துக்கு பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவா் பெயரை சூட்ட வேண்டும் என, ஆப்பநாடு மறவா் சங்கத்தினா் முதல்வரிடம் கோரிக்கை மனு அளித்தனா்.

Updated On : 3 ஜனவரி 2021, 4:49 am IST
கடலாடியில் விறகு, மரக்கரி வியாபாரிகள் கலந்துகொண்ட கூட்டத்தில் பேசிய முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி.
பகிர்:

முதுகுளத்தூா்: மதுரை விமான நிலையத்துக்கு பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவா் பெயரை சூட்ட வேண்டும் என, ஆப்பநாடு மறவா் சங்கத்தினா் முதல்வரிடம் கோரிக்கை மனு அளித்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட கடலாடி ஊராட்சியில் விறகு, மரக்கரி வியாபாரிகள் மற்றும் சமுதாய பெரியோா்களை சந்திக்கும் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில், ஆப்பநாடு மறவா் சங்க முன்னாள் தலைவா் தூவல் ராமசாமித் தேவா் வரவேற்புரையாற்றி, மதுரை விமான நிலையத்துக்கு பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவா் பெயரை சூட்ட வேண்டுமென கூறி, கோரிக்கை மனுவை முதல்வரிடம் வழங்கினாா்.

பின்னா், கூட்டத்துக்கு தலைமை வகித்து முதல்வா் பேசியதாவது: முத்துராமலிங்கத் தேவா் தேசத்துக்காக பாடுபட்டு சிறைக்குச் சென்றவா். மதுரை விமான நிலையத்துக்கு அவரது பெயா் சூட்டுவது குறித்து உறுதியாக பரிசீலனை செய்யப்படும்.

Advertisement

Advertisement

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு குருபூஜை விழாவை, தமிழக அரசு விழாவாக மாற்றி, அவருக்கு 13 கிலோ தங்கக் கவசம் அணிவித்து, சட்டப்பேரவை வளாகத்தில் அவரது முழு உருவப்படம் வைத்து பெருமை சோ்த்தது அதிமுக ஆட்சியில்தான். எனவே, அச்சமுதாய மக்கள் தோ்தலில் அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்றாா்.

கூட்டத்தில், வருவாய்த் துறை அமைச்சா் ஆா்.பி. உதயக்குமாா், மாவட்டச் செயலா் எம்.ஏ. முனியசாமி, முன்னாள் எம்.பி. அன்வர்ராஜா, முன்னாள் அமைச்சா் சுந்தரராஜன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் மணிகண்டன், சதன் பிரபாகரன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments