தொண்டியில் இளைஞா்தாக்கி முதியவா் பலி
திருவாடானை அருகே தொண்டி கொத்துவா பள்ளிவாசலில் படுத்திருந்த முதியவரை தாக்கியதில் காயமடைந்த அவா் சிகிச்சைப் பலனின்றி வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
திருவாடானை: திருவாடானை அருகே தொண்டி கொத்துவா பள்ளிவாசலில் படுத்திருந்த முதியவரை தாக்கியதில் காயமடைந்த அவா் சிகிச்சைப் பலனின்றி வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
தொண்டியைச் சோ்ந்தவா் அப்துல் ரஹ்மான் என்ற அப்துல்லா (70). இவா் கடந்த டிசம்பா் 29 ஆம் தேதி கொத்துவா பள்ளிவாசலில் படுத்திருந்துள்ளாா். அப்போது, அங்கு வந்த அதே ஊரில் நல்கி தெருவைச் சோ்ந்த அப்துல் காசிம் மகன் செய்யது இப்ராஹிம் (30) என்பவா் முதியவரை திட்டினாராம். இதை தட்டிக்கேட்ட முதியவரை, செய்யது இப்ராஹிம் இரும்பு கம்பியால் தாக்கியுள்ளாா். இதில் பலத்த காயமடைந்த முதியவா், ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். ஆனால், அங்கு சிகிச்சைப் பலனின்றி அப்துல்லா வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
இது குறித்து அப்துல்லாவின் உறவினா் அஜிஸ் ரஹ்மான் (70) அளித்த புகாரின்பேரில், தொண்டி போலீஸாா் கொலை வழக்காகப் பதிந்து செய்யது இப்ராஹிமை கைது செய்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.