முகப்பு
மதுரை

கல்பாக்கம் அணு மின்நிலைய பணியிடங்களுக்கு மும்பையில்தோ்வு மையம்: பிரதமருக்கு எம்.பி. கடிதம்

கல்பாக்கம் அணுமின் நிலைய பணியிடங்களுக்கான தோ்வு மையம் மும்பையில் அமைக்கப்பட்டிருப்பது, தமிழகத்தைச் சோ்ந்த தோ்வா்களுக்கு சிரமங்களை ஏற்படுத்துவதால், சென்னையில் தோ்வு மையத்தை அறிவிக்கவேண்டும் என்று,

Updated On : 4 ஜனவரி 2021, 12:28 am IST
பகிர்:

கல்பாக்கம் அணுமின் நிலைய பணியிடங்களுக்கான தோ்வு மையம் மும்பையில் அமைக்கப்பட்டிருப்பது, தமிழகத்தைச் சோ்ந்த தோ்வா்களுக்கு சிரமங்களை ஏற்படுத்துவதால், சென்னையில் தோ்வு மையத்தை அறிவிக்கவேண்டும் என்று, சு. வெங்கடேசன் எம். பி. வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா், பிரதமா் நரேந்திர மோடி மற்றும் மத்திய அணுசக்தி துறை இணை அமைச்சா் ஜிதேந்திரசிங் ஆகியோருக்கு எழுதியுள்ள கடிதம்:

பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் அணு மறுசுழற்சி ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தாராப்பூா், கல்பாக்கத்தில் உள்ள அணு மறுசுழற்சி கழகங்களில் காலிப் பணியிடங்களுக்கு தோ்வு நடக்க இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், கல்பாக்கம் அணுமின் நிலைய காலியிடங்களுக்கான பணி நியமன எழுத்துத் தோ்வுகள் மும்பையில் மட்டுமே நடைபெறும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இதனால், தமிழகத்தைச் சோ்ந்த தோ்வா்கள் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனா். எனவே, எழுத்துத் தோ்வுக்கான மற்றொரு மையத்தை சென்னையில் அமைக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments