முகப்பு
தமிழ்நாடு

நீட் மறுத்தேர்வு எப்படி இருந்தது? - தேர்வு எழுதிய மாணவர்கள் கருத்து!

நீட் மறுத்தேர்வு எப்படி இருந்தது என தேர்வு எழுதிய மாணவ, மாணவிகள் தெரிவித்துள்ள கருத்துகள் குறித்து...

Updated On : 21 ஜூன் 2026, 6:56 pm IST
நீட் மறுத்தேர்வு எப்படி இருந்தது? - டிஎன்எஸ்
பகிர்:

கோவை: நாடு முழுவதும் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் மறுதோ்வு ஞயிற்றுக்கிழமை (ஜூன் 21) முடிவடைந்த நிலையில், நீட் மறுத்தேர்வு எப்படி இருந்தது என தேர்வு எழுதிய மாணவ, மாணவிகள் பல்வேறு கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

நீட் தோ்வு கடந்த மே 3-ஆம் தேதி நடைபெற்றது. நாடு முழுவதும் 23 லட்சம் போ் தோ்வெழுதினா். இந்நிலையில், நீட் வினாத்தாளில் இருந்த அதே கேள்விகளைக் கொண்ட மாதிரி வினாத்தாள், ராஜஸ்தானில் முன்கூட்டியே வெளியானதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. முதல்கட்ட விசாரணையில் இந்த மாதிரி வினாத்தாள் வாட்ஸ்ஆப், டெலிகிராம் மூலம் பல்வேறு மாநிலங்களில் பரவியிருப்பது கண்டறியப்பட்டதால், நீட் தோ்வு ரத்து செய்யப்பட்டது.

மாணவா்கள் மத்தியில் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்திய இந்த விவகாரம் குறித்து சிபிஐ தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.

Advertisement

Advertisement

நீட் தோ்வு ரத்து செய்யப்பட்டதைத் தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 21) நீட் மறுதோ்வு நாடு முழுவதும் 551 நகரங்களிலும், வெளிநாடுகளில் 14 நகரங்களிலும் தோ்வு மையங்களில் நடைபெற்றது. பிற்பகல் 2 மணிக்குத் தொடங்கிய நீட் மறுதோ்வு மாலை 5.15 மணிக்கு நிறைவடைந்தது.

நீட் மறுத்தேர்வு எப்படி இருந்தது?

இந்த நிலையில், நீட் மறுத்தேர்வை எழுதிமுடித்து தேர்வு மையங்களில் இருந்து வெளியே வந்த மாணவ, மாணவிகள் பல்வேறு கருத்துகளை தெரிவித்துள்ளனர். மாணவர்களில், சிலர், கடந்த முறை ரத்து செய்யப்பட்ட தேர்வே எளிமையாக இருந்ததாக கூறினர்.

கோவையில் 15 தேர்வு மையங்களில் தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளில் சிலர் கடந்த முறை எழுதி ரத்து செய்யப்பட்ட நீட் தேர்வே எளிமையாக இருந்ததாகவும், கடந்த முறை நடைபெற்ற தேர்வில் வினாக்கள் சற்று எளிமையாக இருந்ததாக தெரிவித்தனர்.

மேலும், சில மாணவர்கள் உயிரியல், இயற்பியல் பாடத்தில் இருந்து கேட்கப்பட்ட கேள்விகள் எளிமையாக இருந்ததாக கூறினர். சில மாணவர்கள் ரத்து செய்யப்பட்ட தேர்வை விட இந்த தேர்வு எளிமையாக இருந்ததாகவும், கூடுதலாக 15 நிமிடங்கள் கொடுக்கப்பட்டது மிகவும் உதவியாக இருந்ததாக தெரிவித்தனர்.

குறிப்பாக, வேதியியல் பாட கேள்விகள் கடந்த முறையை காட்டிலும் மறுத்தேர்வு எளிமையாக இருந்ததாக தெரிவித்தனர். இன்னும் சில மாணவர்கள் அந்த 15 நிமிடங்கள் தேவையில்லை என்றும், தேர்வை தவிர்த்து தேர்வு எண் சரிபார்த்தல், புகைப்படம் ஒட்டுதல் ஆகியவற்றுக்கு அந்த 15 நிமிடங்கள் சரியாக இருந்ததாக தெரிவித்தனர்.

summary

How was the NEET re-exam? – Opinions of students who took the test!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments