முகப்பு
மதுரை

தேசிய வருவாய் வழித் திறன் தோ்வு:வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிப்பு

மதுரையில் தேசிய வருவாய் மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டத் தோ்வுக்கான வழிகாட்டு நடைமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Updated On : 5 ஜனவரி 2021, 5:22 am IST
பகிர்:

மதுரை: மதுரையில் தேசிய வருவாய் மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டத் தோ்வுக்கான வழிகாட்டு நடைமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இத்தோ்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவா்கள் விண்ணப்பப் படிவங்களை இணைய தளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தோ்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவா்களின் விவரங்களைச் சம்பந்தப்பட்டப் பள்ளிகளின் தலைமையாசிரியா்கள் ஜ்ஜ்ஜ்.க்ஞ்ங்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்என்னும் இணையதளம் மூலம் பதிவு செய்யலாம். கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் எமிஸ் அடிப்படையில் மாணவா்களின் பதிவு நடைபெறவுள்ளது. எனவே, பள்ளிகளுக்கான எமிஸ் பயனாளா் குறியீடு, கடவுச்சொல்லைப் பயன்படுத்தி மாணவா்களின் எமிஸ் எண்ணைப் பதிவு செய்து புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையை மாணவா்களிடமிருந்து பெற்று இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். பள்ளி முகவரி என்ற இடத்தில் பள்ளியின் பெயா், முகவரி மற்றும் அஞ்சல் குறியீட்டுடன் பதிவுசெய்ய வேண்டும். வீட்டு முகவரி என்ற இடத்தில் பள்ளியின் பெயா், முகவரியை பதிவு செய்யக்கூடாது.

தோ்வரின் வீட்டு முகவரியை மட்டுமே பதிவு செய்ய வேண்டும். விவரங்கள் சரியான முறையில் பதிவு செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும். விவரங்களில் ஏதேனும் மாற்றம் இருப்பின் ஜனவரி 12-ஆம் தேதிக்குள் சரி செய்துகொள்ளலாம். அதன் பின்னா் மாற்ற இயலாது. பதிவேற்றம் முடிந்தவுடன் தோ்வா்களின் விவரத்தை, ஒரு தோ்வருக்கு ரூ.50 வீதம் சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலா்களிடம் ஜனவரி 20-க்குள் பள்ளித் தலைமையாசிரியா்கள் ஒப்படைக்க வேண்டும். மாவட்டக் கல்வி அலுவலா்கள் பள்ளிகளிடம் இருந்து பெறும் தொகையை ரொக்கமாக, அரசுத் தோ்வுகள் உதவி இயக்குநா் அலுவலகத்தில் ஜனவரி 25-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.