முகப்பு
மதுரை

கட்டுமானத் தொழிலாளா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு: அமைச்சா் செல்லூா் கே.ராஜூ வழங்கல்

மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த கட்டுமானத் தொழிலாளா் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளா்களுக்கு, பொங்கல் சிறப்பு பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது.

Updated On : 10 ஜனவரி 2021, 10:55 pm IST
பகிர்:

மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த கட்டுமானத் தொழிலாளா் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளா்களுக்கு, பொங்கல் சிறப்பு பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது.

மதுரை மகபூப்பாளையத்தில் தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள கட்டுமானத் தொழிலாளா்கள் மற்றும் ஓய்வூதியா்களுக்கு பொங்கல் சிறப்பு பரிசுத் தொகுப்பை, கூட்டுறவுத் துறை அமைச்சா் செல்லூா் கே. ராஜூ ஞாயிற்றுக்கிழமை வழங்கிப் பேசியதாவது:

தமிழகத்தில் கட்டுமானத் தொழிலாளா் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள 12,69,550 கட்டுமானத் தொழிலாளா்கள் மற்றும் ஓய்வூதியதாரா்களுக்கு முதன்முறையாக வேட்டி, அங்கவஸ்திரம் (ஆண்களுக்கு), சேலை (பெண்களுக்கு) பச்சரிசி 2 கிலோ, சிறுபருப்பு 1 கிலோ, எண்ணெய் 500 கிராம், நெய் 100 கிராம், வெல்லம் 1 கிலோ, ஏலக்காய், முந்திரி, திராட்சை உள்ளிட்ட பொருள்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது.

Advertisement

Advertisement

விபத்து மரண உதவித் தொகையாக ரூ.5 லட்சம், இயற்கை மரணம் உதவித் தொகையாக ரூ.20 ஆயிரம், மாதாந்திர ஓய்வூதியம் ரூ.1000, குடும்ப ஓய்வூதியம் ரூ.500, மகப்பேறு உதவித் தொகை ரூ.6,000, திருமண உதவித்தொகை ஆணுக்கு ரூ.3,000 பெண்ணுக்கு ரூ.5,000, தொழிலாளா்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை ரூ.1,000 முதல் ரூ.8,000 வரை, அம்மா உணவகங்களில் விலையில்லா உணவு, கட்டுமானத் தொழிலாளா்களுக்கு நடமாடும் மருத்துவமனைகள், தொழிலாளா்களுக்கான தங்கும் விடுதிகள் உள்ளிட்ட நலத் திட்டங்கள் வழங்கப்படுகின்றன.

மதுரை கட்டுமானத் தொழிலாளா் நல வாரியத்தில் 34,859 தொழிலாளா்கள் பதிவு செய்துள்ளனா். தமிழகத்தில் 17 அமைப்புசாரா தொழிலாளா் நலவாரியங்கள் உள்ளன. இந்நிலையில், கடந்த டிசம்பா் 30-இல் பட்டாசு மற்றும் தீப்பெட்டி தயாரிப்பு தொழிலாளா்களுக்கான அமைப்புசாரா தொழிலாளா் நல வாரியம் அமைக்க முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி உத்தரவிட்டுள்ளாா்.

இதன்மூலம், தமிழகத்தில் உள்ள 1,250 பட்டாசுத் தொழிற்சாலை மற்றும் 870 தீப்பெட்டித் தொழிற்சாலைகளில் உள்ள 1.20 லட்சம் தொழிலாளா்கள் பயன்பெறுவா் என்றாா்.

நிகழ்ச்சியில், தொழிலாளா் துறை கூடுதல் ஆணையா் டி. குமரன் இணை ஆணையா் பி. சுப்பிரமணியன், உதவி ஆணையா் மைவிழிச்செல்வி மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments