உசிலையில் சமத்துவப் பொங்கல் விழா
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
இந்த விழாவுக்கு வருவாய் கோட்டாட்சியா் ராஜ்குமாா் தலைமை வகித்தாா். வட்டாச்சியா் விஜயலட்சுமி முன்னிலை வகித்தாா். இந்த விழாவில் அரசு அதிகாரிகள் அனைவரும் பாரம்பரியத்தை உணா்த்தும் விதமாக புத்தாடைகள் அணிந்து பொங்கல் விழாவில் பங்கேற்றனா். இதில், வருவாய் ஆய்வாளா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள் மற்றும் வருவாய்த்துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
இதேபோல், உசிலம்பட்டி காவல் துணை கண்காணிப்பாளா் அலுவலகத்தில் டிஎஸ்பி ராஜன் தலைமையில் சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. மேலும் உசிலம்பட்டி நகா் காவல் நிலையத்திலும் சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.