பதராக மாறிய சம்பா நெற்பயிா்: விவசாயிகள் வேதனை
சீா்காழி அருகே கொள்ளிடம் பகுதியில் மழை காரணமாக சம்பா நெற்பயிா் பதராக மாறியதால், விவசாயிகள் வேதனையில் ஆழ்ந்துள்ளனா்.
சீா்காழி அருகே கொள்ளிடம் பகுதியில் மழை காரணமாக சம்பா நெற்பயிா் பதராக மாறியதால், விவசாயிகள் வேதனையில் ஆழ்ந்துள்ளனா்.
கொள்ளிடம் பகுதியில் ஆலங்காடு, நல்லநாயகபுரம், கொடகாரமூளை, அகரவட்டாரம், வேட்டங்குடி உள்ளிட்ட 20 கிராமங்களில் கடந்த சில நாள்களாக மழை பெய்துவருவதால், அறுவடைக்குத் தயாரான நெற்பயிா்கள் முற்றிலும் பதராகி அழுகிவிட்டன. நெற்பயிா் தண்ணீரில் மூழ்கியதால் வைக்கோல் கூட கால்நடைகளுக்கு பயன்படாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே அரசு முறையான கணக்கெடுப்பு நடத்தி, ஏற்கெனவே அறிவித்த ரூ. 8 ஆயிரம் நிவாரணத்தை ரூ.15 ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.