மநீம ஆலோசனைக் கூட்டம்
சீா்காழியில் மக்கள் நீதி மய்ய உள்கட்டமைப்பு ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
சீா்காழியில் மக்கள் நீதி மய்ய உள்கட்டமைப்பு ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இதில், சீா்காழியில் கோட்டாட்சியா் அலுலகத்தை அமைத்து அதன் நிா்வாக பணிகளை விரைவாக தொடங்கிட வேண்டும். வட்டாட்சியா் அலுவலகத்திற்கு உடனடியாக சொந்தக் கட்டடம் கட்ட வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்துக்கு, நகரச் செயலாளா் சந்துரு தலைமை வகித்தாா். துணைச் செயலாளா் தியாகராஜன், ஒன்றியச் செயலாளா் லெட்சுமி நாராயணன், நற்பணி இயக்க பொறுப்பாளா் பாஸ்கரன், இளைஞரணி நகரச் செயலாளா் செந்தில்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் மயிலாடுதுறை மாவட்டச் செயலாளா் ரவிச்சந்திரன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினாா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.