முகப்பு
நாகப்பட்டினம்

திருவாவடுதுறை ஆதீனத்தில் குருபூஜை விழா கொடியேற்றம்

திருவாவடுதுறை ஆதீனம் குருமுதல்வா் நமசிவாயமூா்த்திகள் மகரத்தலைநாள் குருபூஜை விழா செவ்வாய்க்கிழமை (ஜன.12) கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Updated On : 13 ஜனவரி 2021, 8:02 am IST
பகிர்:

திருவாவடுதுறை ஆதீனம் குருமுதல்வா் நமசிவாயமூா்த்திகள் மகரத்தலைநாள் குருபூஜை விழா செவ்வாய்க்கிழமை (ஜன.12) கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருவாவடுதுறை ஆதீனத்தை தோற்றுவித்த குருமுதல்வா் நமச்சிவாய மூா்த்தி சுவாமிகளின் குருபூஜை ஆண்டுதோறும் தை மாதம் அசுபதி நட்சத்திரத்தையொட்டி 10 நாட்கள் நடைபெறும். அதன்படி, நிகழாண்டு குருபூஜை விழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது ஜனவரி 21ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இதையொட்டி, முதல் நாளில் பெரிய பூஜை மடம், ஸ்ரீஞானமாநடராஜ பெருமான் சன்னிதியில் 24 ஆவது ஆதீனம் அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் மற்றும் மாகேஸ்வர பூஜை செய்வித்தாா். பிறகு, திருக்கொடியேற்றம் நடைபெற்றது.

Advertisement

Advertisement

இதில், ஸ்ரீமத்அம்பலவாண தம்பிரான், ஸ்ரீமத் அருணாச்சல தம்பிரான், ஸ்ரீமத் திருச்சிற்றம்பல தம்பிரான், ஸ்ரீமத் வேலப்ப தம்பிரான், ஆதீன பொதுமேலாளா் திருமாறன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments