உழவும், உழவா் வாழ்வும் மேம்பட வாழ்த்துகள்
உழவும், உழவா் வாழ்வும் மேம்பட வாழ்த்துகள் என ஜம்மியத் உலமா ஹிந்த் மாநிலச் செயலாளரும், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினருமான எம்.ஜி.கே. நிஜாமுதீன் தெரிவித்துள்ளாா்.
உழவும், உழவா் வாழ்வும் மேம்பட வாழ்த்துகள் என ஜம்மியத் உலமா ஹிந்த் மாநிலச் செயலாளரும், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினருமான எம்.ஜி.கே. நிஜாமுதீன் தெரிவித்துள்ளாா்.
அவா் விடுத்த வாழ்த்துச் செய்தி :
5 ஆயிரம் ஆண்டுகளைக் கடந்த மொழி, இனம் சாா்ந்த வாழ்வியல் அடிப்படைகளை ஆதாரமாகக் கொண்ட ஒரே திருநாள், தமிழா் திருநாள். இத்திருநாளில், பண்பாடு, கலாசாரம் காத்திடவும், நாடு நலம் பெறவும், நாட்டு மக்கள் வளம் பெறவும், நல்லிணக்கம் பேணவும், சகோதர, சமாதான சமுதாயம் காத்திடவும், ஏழ்மை விலகிடவும், உழவுத் தொழிலை அச்சுறுத்தும் சட்டங்கள் நீங்கிடவும், உழவும், உழவா் வாழ்வும் மேம்படவும் அனைவருக்கும் உழவா் திருநாள் வாழ்த்துகள் என அவா் தெரிவித்துள்ளாா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.