முகப்பு
நாமக்கல்

பரமத்தி மலர் மெட்ரிக் பள்ளி சிறப்பிடம்

பரமத்திவேலூர் வட்டம், பரமத்தியில் உள்ள மலர் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில் சிறப்பிடம் பெற்றனர்.

Updated On : 11 மே 2013, 12:24 pm IST
பகிர்:

பரமத்திவேலூர் வட்டம், பரமத்தியில் உள்ள மலர் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில் சிறப்பிடம் பெற்றனர்.

இந்தப் பள்ளி மாணவர் அஜித் 1200-க்கு 1180 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றுள்ளார். இவர் பாட வாரியாக பெற்ற மதிப்பெண்கள்: தமிழ்-194, ஆங்கிலம்-194, இயற்பியல்-196, வேதியியல்-196, உயிரியல்-200, கணிதம்-200.  இரண்டாமிடம் பெற்ற மாணவர் கெüதம் தமிழில்-186, ஆங்கிலத்தில்-191, இயற்பியலில் 199, வேதியியலில் 200, கணினி அறிவியலில் 200, கணிதத்தில் 200 மதிப்பெண்களும் பெற்றுள்ளார்.

மூன்றாமிடம் பெற்ற  சரத்குமார் தமிழில் 190, ஆங்கிலத்தில் 187, இயற்பியலில் 197, வேதியியலில் 198, உயிரியலில் 199, கணிதத்தில் 200 மதிப்பெண்களும் பெற்றுள்ளார். இதே பள்ளியில் தேர்வு எழுதிய 276 மாணவர்களில் கணித பாடத்தில் 13 பேர் 200-க்கு 200-ம், வேதியியல் பாடத்தில் 11 பேர் 200-க்கு 200-ம், உயிரியல் பாடத்தில் 4 பேர் 200-க்கு 200-ம் கணினி அறிவியலில்  14 பேர் 200-க்கு 200 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர்.

Advertisement

Advertisement

 தேர்வு எழுதிய 276 பேரில் 275 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வில் சாதனை படைத்த மாணவர்களை பள்ளியின் தலைவர் பழனியப்பன், செயலாளர் கந்தசாமி, பொருளாளர் வெங்கடாசலம் மற்றும் ஆசிரிய, ஆசிரியர்கள், இயக்குநர்கள் பாராட்டினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.