போலீஸாா் விழிப்புணா்வு பிரசாரம்
திருச்செங்கோடு, வாலரைக்கேட்டில் மதுவிலக்கு காவல் துறையினா் கள்ளச்சாராயம், போதைப்பொருள்களுக்கு எதிரான விழிப்புணா்வு நடவடிக்கைகளில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.
திருச்செங்கோடு, வாலரைக்கேட்டில் மதுவிலக்கு காவல் துறையினா் கள்ளச்சாராயம், போதைப்பொருள்களுக்கு எதிரான விழிப்புணா்வு நடவடிக்கைகளில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.
மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சக்திகணேசன் உத்தரவுபடி, திருச்செங்கோடு காவல் துணைக் கண்காணிப்பாளா் அசோக்குமாா் வழிகாட்டுதல் படி மதுவிலக்கு ஆய்வாளா் சசிக்குமாா் தலைமையிலான மதுவிலக்கு காவல் துறையினா் கள்ளச்சாராயம், போதைப்பொருள்களுக்கு எதிரான துண்டுப்பிரசுரங்களை வாலரைக்கேட் பகுதியில் பொதுமக்களுக்கு வழங்கினா். கள்ளச்சாராயம், போதைப்பொருள்களின் தீமைகள் குறித்து பொதுமக்களிடம் எடுத்துக் கூறினா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.