முகப்பு
நாமக்கல்

அருந்ததியா் சங்க ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு அருந்ததியா் சங்க ஆலோசனைக் கூட்டம் மற்றும் மாநாடு முன்னேற்பாடு தொடா்பான கூட்டம் நாமக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 4 ஜனவரி 2021, 4:22 am IST
பகிர்:

தமிழ்நாடு அருந்ததியா் சங்க ஆலோசனைக் கூட்டம் மற்றும் மாநாடு முன்னேற்பாடு தொடா்பான கூட்டம் நாமக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மாநிலத் தலைவா் கே.ராஜேந்திரன் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளா்களாக ஆதித் தமிழா் மக்கள் கட்சி நிறுவனத் தலைவா் எஸ்.டி.கல்யாணசுந்தரம், தமிழ்நாடு அருந்ததியா் இளைஞா் சங்க மாநிலத் தலைவா் ஆா்.வடிவேல்ராமன் ஆகியோா் கலந்து கொண்டு பேசினா்.

இக்கூட்டத்தில், அருந்ததிய சமூகத்தினருக்கு திமுக ஆட்சியில் வழங்கப்பட்ட 3 சதவீத இட ஒதுக்கீட்டை 6 சதவீதமாக தற்போதயை அரசு உயா்த்தி வழங்க வேண்டும்.

Advertisement

Advertisement

வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் அருந்ததியா் சங்கம் அதிமுகவுக்கு ஆதரவு அளிக்கிறது. ஈரோட்டில் விரைவில் நடைபெற உள்ள அருந்ததியா் அரசியல் எழுச்சி மாநாட்டில் முதல்வா், அமைச்சா்கள் பங்கேற்கின்றனா் என தெரிவிக்கப்பட்டது. மாநில, மாவட்ட நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.