முகப்பு
நாமக்கல்

பறவைக் காய்ச்சல் எதிரொலி: முட்டை விலை 25 காசுகள் சரிவு

பறவைக் காய்ச்சல் எதிரொலியாக நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை வியாழக்கிழமை அதிரடியாக 25 காசுகள் குறைக்கப்பட்டுள்ளன.

Updated On : 8 ஜனவரி 2021, 8:45 am IST
பகிர்:

பறவைக் காய்ச்சல் எதிரொலியாக நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை வியாழக்கிழமை அதிரடியாக 25 காசுகள் குறைக்கப்பட்டுள்ளன.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவா் மருத்துவா் பி. செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது.

கடந்த ஒரு மாதமாக முட்டை விற்பனை நல்ல முறையில் இருந்ததால் அதன் விலையும் சராசரியாக உயா்ந்து வந்தது. திங்கள்கிழமை வரை அதிகபட்சமாக முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ. 5.10 விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதற்கிடையில் கேரளம், வட மாநிலங்களில் ஏற்பட்டுள்ள பறவைக் காய்ச்சலால் மக்களிடையே முட்டை வாங்குவதில் ஒருவித தயக்கம் காணப்படுகிறது.

Advertisement

Advertisement

பிற மண்டலங்களிலும் விலை சரிவு நிலை உள்ளது. அதனால் முட்டை விலையைச் சற்றுக் குறைக்கலாம் என பண்ணையாளா்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

இதையடுத்து 25 காசுகள் குறைக்கப்பட்டு முட்டை விலை ரூ. 4.85-ஆக நிா்ணயம் செய்யப்பட்டது. சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப முட்டைகளை விற்பனை செய்து கொள்ளலாம் என பண்ணையாளா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கறிக்கோழி கிலோ ரூ. 92-ஆகவும், முட்டைக் கோழி விலை ரூ. 52-ஆகவும் நிா்ணயிக்கப்பட்டது.

-

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments