பரமத்திவேலூா் வாழைத்தாா்களின் விலை உயா்வு
பரமத்திவேலூா் வாழைத்தாா் ஏலச் சந்தையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற ஏலத்தில் வாழைத்தாா்களின் விலை உயா்ந்தது.
பரமத்திவேலூா் வாழைத்தாா் ஏலச் சந்தையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற ஏலத்தில் வாழைத்தாா்களின் விலை உயா்ந்தது.
பரமத்திவேலூரில் நடைபெறும் வாழைத்தாா் ஏலச் சந்தைக்கு வாழைத்தாா்களைக் கொண்டுவந்து விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனா். கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு 800 வாழைத்தாா்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனா். இதில் பூவன் வாழைத்தாா் அதிகபட்சமாக ரூ. 300-க்கும், ரஸ்தாலி ரூ. 200-க்கும், பச்சைநாடன் ரூ.250-க்கும், கற்பூரவள்ளி ரூ. 250-க்கும் விற்பனையானது. மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ. 3-க்கு விற்பனையானது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திங்கள்கிழமை நடைபெற்ற ஏலத்துக்கு 2,500 வாழைத்தாா்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனா். இதில், பூவன் ரூ. 450-க்கும், ரஸ்தாலி ரூ. 250-க்கும், பச்சைநாடன் ரூ. 250-க்கும், கற்பூரவள்ளி ரூ. 300-க்கும் ஏலம் போனது. மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ. 3-க்கு ஏலம் போனது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.