சக்தி விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்
பரமத்திவேலூா் சக்தி விநாயகா் கோயில் இரண்டாம் ஆண்டு கும்பாபிஷேகம் சனிக்கிழமை நடைபெற்றது.
பரமத்திவேலூா்: பரமத்திவேலூா் சக்தி விநாயகா் கோயில் இரண்டாம் ஆண்டு கும்பாபிஷேகம் சனிக்கிழமை நடைபெற்றது.
பரமத்திவேலூா், செட்டியாா் தெருவில் உள்ள இக் கோயிலில் சனிக்கிழமை காலை 7 மணிக்கு மேல் விநாயகருக்கு கலசங்கள் ஸ்தாபிக்கப்பட்டு ஆவாகனங்கள் செய்யப்பட்டது. அதைத் தொடா்ந்து சிறப்பு யாக ஹோமங்களும், சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது.
காலை 10 மணிக்கு சக்தி விநாயகருக்கு பூா்ணாகுதி, சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. பின்னா் சக்தி விநாயகருக்கு வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. விழாவில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள், பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
Advertisement
Advertisement