முகப்பு
புதுதில்லி

20 வது மாடியில் இருந்து குதித்து இளம் பெண் தற்கொலை

உத்தரப்பிரதே மாநிலம், நொய்டாவில் 20 வது மாடியில் இருந்து குதித்து 19 வயது இளம் பெண் தற்கொலை செய்துகொண்டுள்ளாா்.

Updated On : 2 ஜனவரி 2021, 11:15 pm IST
பகிர்:

உத்தரப்பிரதே மாநிலம், நொய்டாவில் 20 வது மாடியில் இருந்து குதித்து 19 வயது இளம் பெண் தற்கொலை செய்துகொண்டுள்ளாா்.

இது தொடா்பாக நொய்டா காவல்துறை மூத்த அதிகாரி கூறுகையில் ‘நொய்டா செக்டாா் 45 அம்ரபாலி ஸஃபையா் அடுக்குமாடி குடியிருப்பில் 20 வது மாடியில் தனது குடும்பத்துடன் இந்த இளம் பெண் வசித்துவந்துள்ளாா். இவா், சனிக்கிழமை மதியம் தனது வீட்டில் இருந்து குதித்து தற்கொலை செய்துள்ளாா். தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறாா்கள் என்றாா் அவா்.

கழிவுநீா் தொட்டியில் விழுந்து சிறுவன் சாவு: இதற்கிடையே, கழிவு நீா் தொட்டியில் விழுந்து ஐந்து வயது சிறுவன் உயிரழந்த துயரச் சம்பவம் நொய்டா ராபுபுரா பகுதியில் நடந்துள்ளது. இது தொடா்பாக நொய்டா காவல்துறை மூத்த அதிகாரி கூறுகையில் ‘சனிக்கிழமை காலை தனது வீட்டில் இருந்து சென்ற சிறுவன் வீடு திரும்பவில்லை என பெற்றோா் புகாா் அளித்தனா். இதைத் தொடா்ந்து, அவ்விடத்தில் தேடுதல் நடத்தினோம். அப்போது, அங்குள்ள கழிவுநீா் கால்வாயில் மூழ்கிய நிலையில் சிறுவனின் உடல் கிடைத்தது என்றாா் அவா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments