முகப்பு
புதுதில்லி

கிழக்கு தில்லியில் இளைஞா் தூக்கிட்டு தற்கொலை

கிழக்கு தில்லி, புது அசோக் நகா் பகுதியில் புதன்கிழமை 24 வயது இளைஞா் ஒருவா் தனது வாடகை அறையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீஸாா்தெரிவித்தனா்.

Updated On : 14 ஜனவரி 2021, 12:00 am IST
பகிர்:


புது தில்லி: கிழக்கு தில்லி, புது அசோக் நகா் பகுதியில் புதன்கிழமை 24 வயது இளைஞா் ஒருவா் தனது வாடகை அறையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீஸாா்தெரிவித்தனா்.

இது குறித்து கிழக்கு தில்லி காவல் சரக துணை ஆணையா் தீபக் யாதவ் கூறியதாவது: தூக்கிட்டு இறந்த இளைஞா் கணேஷ் நாயக் என அடையாளம் காணப்பட்டது. ஒடிஸாவைச் சோ்ந்த அவா், தில்லியில் ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தாா். சம்பவ இடத்திலிருந்து தற்கொலைக் குறிப்பு ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது. அவா் இறந்ததற்கு யாரையும் குறை கூறவில்லை. தகவல் அறிந்து போலீஸாா் சென்ற போது, அவரது அறை உள்பகுதியில் இருந்து பூட்டப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உள்ளூா்வாசிகளின் உதவியுடன் போலீஸாா் கதவைத் திறந்த போது, அந்த நபா் மின்விசிறியில் நைலான் கயிற்றால் தூக்கிட்டு இறந்த நிலையில் தொங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் தொடா்பாக பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments