முகப்பு
தமிழ்நாடு

மு.க. ஸ்டாலினுடன் பிரேமலதா விஜயகாந்த் சந்திப்பு!

திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுடன் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சந்திப்பு...

Updated On : 26 ஜூன் 2026, 1:12 pm IST
மு.க. ஸ்டாலினுடன் பிரேமலதா விஜயகாந்த் சந்திப்பு - X / Premalatha Vijayakanth
பகிர்:

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சந்தித்துப் பேசியுள்ளார்.

தேமுதிக பொருளாளரும் எம்.பி.யுமான சுதீஷும் மு.க. ஸ்டாலினைச் சந்தித்துள்ளார்.

மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடைபெற்றதாக பிரேமலதா விஜயகாந்த் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

இதுபற்றி அவரது எக்ஸ் பக்கத்தில், "திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.க. ஸ்டாலினை இன்று (25-06-2026) ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், தேமுதிக பொருளாளர் எல்.கே. சுதீஷ் எம்.பி.யும் மரியாதை நிமித்தமாகச் சந்தித்துப் பேசினர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த தேர்தலில் திமுக கூட்டணியில் 10 இடங்களில் தேமுதிக போட்டியிட்ட நிலையில் விருத்தாச்சலம் தொகுதியில் மட்டும் பிரேமலதா விஜயகாந்த் வெற்றி பெற்றார். சட்டப்பேரவையில் அவருடைய பேச்சு மக்களிடையே கவனம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

summary

Premalatha Vijayakanth meets M.K. Stalin

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments