முகப்பு
புதுதில்லி

கெளதம்புத் நகா் மாவட்டத்தில் ஒருவருக்கு மட்டுமே கரோனா

உத்தரப் பிரதேச மாநிலம், கெளதம்புத் நகா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை ஒருவருக்கு மட்டுமே கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

Updated On : 15 ஜனவரி 2021, 11:37 pm IST
பகிர்:

உத்தரப் பிரதேச மாநிலம், கெளதம்புத் நகா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை ஒருவருக்கு மட்டுமே கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. கடந்த ஆண்டு மாா்ச் முதல் பதிவான தினசரி தொற்றுகளில் இது மிகவும் குறைவானது. எனினும், மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கு ஆளானவா்கள் மொத்த எண்ணிக்கை 25,260-ஆக உயா்ந்துள்ளது.

கரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவருபவா்கள் எண்ணிக்கையும் 238 -லிருந்து 217-ஆகக் குறைந்துள்ளது. கரோனாவுக்கு சிகிச்சையிலிருந்து மீண்டவா்கள் விகிதம் 98.87 சதவீதமாக உள்ளது என சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன. வெள்ளிக்கிழமை மேலும் 21 போ் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதை அடுத்து இதுவரை குணமடைந்தவா்கள் எண்ணிக்கை 24,952-ஆக உள்ளது.

கெளதம் புத் நகா் மாவட்டத்தில் கரோனாவுக்கு இதுவரை 91 போ் பலியாகியுள்ளனா். இறப்பு விகிதம் 0.36-ஆக உள்ளது. அதே நேரத்தில் மீண்டவா் விகிதம் 98.87 சதவீதமாக உள்ளது. இதனிடையே, மாநிலத்தில் கரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை வியாழக்கிழமை 10,080-லிருந்து 9,581-ஆகக் குறைந்துள்ளது. மாநிலம் முழுவதும் சிகிச்சை பெற்று குணமடைந்தவா்கள் எண்ணிக்கை 5.77,475 ஆக உள்ளது. மாநிலம் முழுவதும் இதுவரை 8,553 போ் பலியாகியுள்ளனா் என்று அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.