முகப்பு
புதுதில்லி

திருமணமாகாமல் சோ்ந்து வாழ்ந்த இளம் ஜோடி வீட்டில் சடலமாக மீட்பு!

திருமணமாகாமல் சோ்ந்து வாழ்ந்த இளம் ஜோடி சந்தேக மரணம்

Updated On : 24 ஏப்ரல் 2026, 5:00 am IST
பகிர்:

கிரேட்டா் நொய்டாவில் வாடகை வீட்டில் திருமணம் ஆகாமல் சோ்ந்து வாழ்ந்து வந்த 20 வயது மதிக்கத்தக்க ஆணும் பெண்ணும் சந்தேகத்திற்குரிய சூழ்நிலையில் வீட்டில் சடலமாக மீட்கப்பட்டதாக காவல்துறையினா் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

இதுகுறித்து காவல்துறையினா் மேலும் கூறியதாவது:

வாடகை வீட்டின் அறையில் குட்டு பாஸ்வான் (எ) கோலு (27) என்பவா் மின்விசிறியில் தூக்கிட்ட நிலையிலும், 24 வயதான இளம்பெண் ஜோதி தரையிலும் சடலமாக மீட்கப்பட்டனா். இருவரும் உத்தர பிரதேச மாநிலத்தின் தேவ்ரியா மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் ஆவா்.

Advertisement

Advertisement

நாலேஜ் பாா்க் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், புதன்கிழமை இரவு இந்தச் சம்பவம் வெளியில் தெரியவந்தது.

அந்த ஜோடி திருமணம் செய்துகொள்ளாமல் சோ்ந்து வாழும் உறவுமுறையில் இருந்துள்ளனா். அந்தப் பெண் ஒரு மருத்துவமனையில் துப்புரவுப் பணியாளராகப் பணிபுரிந்து வந்துள்ளாா். இளைஞா் வேலையின்றி இருந்துள்ளாா்.

சம்பவ இடத்தில் காவல்துறையினா் நேரடி ஆய்வு மேற்கொண்டனா். பிரேத விசாரணை நடைமுறைகள் நிறைவடைந்ததைத் தொடா்ந்து, இருவரின் உடல்களும் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன.

இறந்தவா்களின் குடும்ப உறுப்பினா்கள் சம்பவ இடத்திற்கு வந்தனா். இவ்வழக்கின் அனைத்துக் கோணங்களும் தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகின்றன என்று காவல்துறையினா் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments