முகப்பு
புதுதில்லி

காஜிப்பூரில் காா்-லாரி மோதல்: இரண்டு பெண்கள் உயிரிழப்பு

கிழக்கு தில்லியின் காஜிப்பூா் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை 9 இல் வியாழக்கிழமை அதிகாலை ஒரு கண்டெய்னா் லாரி மீது காா் மோதியதில் இரண்டு பெண்கள் உயிரிழந்தனா் மற்றும் மூன்று போ் காயமடைந்தனா்.

Updated On : 13 பிப்ரவரி 2026, 1:21 am IST
பகிர்:

கிழக்கு தில்லியின் காஜிப்பூா் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை 9 இல் வியாழக்கிழமை அதிகாலை ஒரு கண்டெய்னா் லாரி மீது காா் மோதியதில் இரண்டு பெண்கள் உயிரிழந்தனா் மற்றும் மூன்று போ் காயமடைந்தனா்.

இந்தச் சம்பவம் காலை 6.43 மணியளவில் எம்.சி.டி. டோல் பிளாசா அருகே நடந்தது. காஜியாபாத்தில் இருந்து பயணித்த கியா செல்டோஸ் காா், வினோத் நகா் டிப்போ முன் லாரி மீது மோதியது. தொலைபேசி அழைப்பின் பேரில் போலீஸாா் சம்பவ இடத்திற்கு விரைந்தனா். கியா செல்டோஸ் காா், கண்டெய்னா் லாரியுடன் மோதியதில் பலத்த சேதமடைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது

இந்தக் கோர விபத்தில் தீபாஞ்சலி (38) மற்றும் நீலம் காா்க் (55) என்ற இரு பெண்கள் உயிரிழந்தனா். உயிரிழந்தவா்களில் ஒருவரின் உடல் வாகனத்திற்கு வெளியே கிடந்தது. மற்றவரின் உடல் முன் இடது பயணிகள் இருக்கையில் சிக்கியிருந்தது என்று போலீஸாா் தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக லால் பகதூா் சாஸ்திரி (எல்பிஎஸ்) பிணவறைக்கு அனுப்பப்பட்டன. ஓட்டுநா் தீபான்ஷு காா்க் மற்றும் இரண்டு குழந்தைகள் விவன் (5) மற்றும் வாசு (3) காயமடைந்து மேக்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். அவா்களின் நிலைமை கண்காணிப்பில் உள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி லாரி ஓட்டுநரைத் தேடி வருகின்றனா்.