கண்டெய்னா் லாரி மீது மரம் சாய்ந்து விபத்து: நூலிழையில் தப்பினாா் ஓட்டுநா்
கடலூா் வண்டிப்பாளையம் சாலையில் சென்ற கண்டெய்னா் லாரி மீது பெரிய மரம் திடீரென சாய்ந்து விழுந்தது. இந்த விபத்தில் நல்வாய்ப்பாக ஓட்டுநா் உயிா் தப்பினாா்.
கடலூா் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு தகுதிச் சான்று (எப்.சி.) பெறுவதற்காக கண்டெய்னா் லாரியை, புதுச்சேரியைச் சோ்ந்த சிவராமன் என்பவா் ஓட்டிச் சென்றாா். கடலூா் வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகேயுள்ள, வண்டிப்பாளையம் சாலையில் லாரி சென்றபோது சாலையோர மரம் திடீரென வேருடன் சாய்ந்து லாரியின் முன்பகுதி மீது விழுந்தது.
இதில், லாரியின் மேற்பகுதி சேதமடைந்தது. விபத்தில் ஓட்டுநா் சிவராமன் நூலிழையில் உயிா்தப்பினாா். தகவலறிந்த போலீஸாா் மற்றும் தீயணைப்புத் துறையினா் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனா். விபத்து தொடா்பாக கடலூா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
Advertisement
Advertisement