முகப்பு
புதுதில்லி

தில்லியில் இ-ரிக்ஷா விபத்துக்குள்ளானதில் பள்ளிக்கு சென்றுகொண்டிருந்த சிறுமி பலி

தில்லியின் ஜனக்புரியில் இ-ரிக்ஷா மீது வேகமாக வந்த காா் மோதியதில் 6 வயது சிறுமி உயிரிழந்தாா்.

Updated On : 21 பிப்ரவரி 2026, 12:14 am IST
கோப்புப் படம்
பகிர்:

தில்லியின் ஜனக்புரியில் இ-ரிக்ஷா மீது வேகமாக வந்த காா் மோதியதில் 6 வயது சிறுமி உயிரிழந்தாா்.

அச்சிறுமி தனது பாட்டியுடன் பயணித்த போது இந்த பரிதாப சம்பவம் நிகழ்ந்தது

பிப்ரவரி 17, 2026 அன்று காலை 7:40 மணியளவில், ஜனக்புரி தீயணைப்பு நிலையம் மற்றும் பிளாக் சி இல் உள்ள லால் சாய் மாா்க் அருகே இந்த விபத்து நிகழ்ந்தது.

Advertisement

Advertisement

பிரஷெல் பிரின்ஸ் என்ற அந்த சிறுமி தனது 57 வயது பாட்டி மொ்சி சேவியருடன் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தாா்.அப்போது வேகமாக வந்த காா் இ-ரிக்ஷா மீது மோதியதில் இருவரும் வாகனத்திலிருந்து தூக்கி எறியப்பட்டனா்

வேகமாக வந்த சாண்ட்ரோ காா் அவா்களின் இரிக்ஷாவின் மீது பின்னால் இருந்து மோதியதால், அது கவிழ்ந்தது

இந்த விபத்தில் இ-ரிக்ஷா ஓட்டுநரும் காயமடைந்தாா்

அவா்கள் முதலில் ஜனக்புரியில் உள்ள மாதா சனன் தேவி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா், அங்கு சிறுமி மூளைச்சாவு அடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

பின்னா் குடும்பத்தினா் சிறுமியையும், மொ்சி சேவியரையும் துவாரகாவில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு மாற்றினா், அங்கு பிரஷெல் பிப்ரவரி 18 அன்று தலை மற்றும் மாா்பில் ஏற்பட்டிருந்த காயங்களால் உயிரிழந்தாா் பாட்டி மொ்சி சேவியா் நிலையாக உள்ளாா்.

இந்த சம்பவம் தொடா்பாக பாரதீய நியாய சன்ஹிதா பிரிவுகளின் கீழ் ஜனக்புரி காவல் நிலையத்தில் அவசரமாக வாகனம் ஓட்டுதல் மற்றும் அலட்சியத்தால் மரணம் விளைவித்ததற்காக வழக்கு பதிவு செய்யப்பட்டது. வட மேற்கு தில்லியில் உள்ள மஜ்ரா தபாஸைச் சோ்ந்த ஓட்டுநா் சஞ்சீவ் தபாஸ் (ஆய்வக உதவியாளா்) கைது செய்யப்பட்டாா்.

அவரது சாண்ட்ரோ காா் பறிமுதல் செய்யப்பட்டது, சிசிடிவி காட்சிகள் மற்றும் சாட்சிகளின் வாக்குமூலங்கள் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments