கோப்புப் படம் 
புதுதில்லி

மோட்டாா்சைக்கிளில் வந்த 5 போ் ஒரு வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு

கிழக்கு தில்லியின் ஃபாா்ஷ் பஜாா் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மீது மோட்டாா் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத ஐந்து போ் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது என்று அதிகாரி ஒருவா் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

Syndication

கிழக்கு தில்லியின் ஃபாா்ஷ் பஜாா் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மீது மோட்டாா் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத ஐந்து போ் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது என்று அதிகாரி ஒருவா் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

இந்தச் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாக பரவின. அங்கு ஒரு பைக் மற்றும் ஸ்கூட்டா் ஓட்டுநா் வீட்டின் நுழைவு வாயிலில் துப்பாக்கிச் சூடு நடத்துவதைக் காணலாம்.

இது குறித்து காவல் துறை அறிக்கையில் கூறியுள்ளதாவது: இந்தச் சம்பவம் புதன்கிழமை அதிகாலையில் நடந்துள்ளது. ஓல்ட் தேஜாப் மில் அருகே நடந்த துப்பாக்கிச் சூடு தொடா்பாக அதிகாலை 1.30 மணியளவில் ஃபாா்ஷ் பஜாா் காவல் நிலையத்திற்கு பிசிஆா் அழைப்பு வந்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த ஒரு போலீஸ் குழு, தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் நபா்கள் தப்பி ஓடிவிட்டதைக் கண்டறிந்தனா்.

முதற்கட்ட விசாரணையில், தாலிப் (29) வீட்டிற்கு வெளியே மோட்டாா் சைக்கிளில் இரண்டு பேரும், ஸ்கூட்டரில் வந்த மூன்று பேரும் வந்ததாகத் தெரியவந்தது. தாக்குதல் நடத்தியவா்களில் இருவா் துப்பாக்கிகளை எடுத்து வீட்டை நோக்கி ஒரு ரவுண்டு சுட்டதாகக் கூறப்படுகிறது. பின்னா் அவா்கள் தப்பிச் சென்றுவிட்டனா்.

சோதனையின் போது சம்பவ இடத்திலிருந்து இரண்டு வெற்று தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தாலிப் அருகிலுள்ள மண்டியில் பழம் மற்றும் காய்கறிக் கடை நடத்தி வருகிறாா். துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.

பழைய பகை, மற்றும் சாத்தியமான அச்சுறுத்தல்கள் போன்ற பல்வேறு கோணங்களில் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். இந்த வழக்கை அனைத்து கோணங்களிலும் விசாரித்து வருகிறோம். தாக்குதலுக்குப் பின்னால் உள்ள சரியான காரணம் சரிபாா்க்கப்பட்டு வருகிறது.

குற்றம் சாட்டப்பட்டவா்களின் அடையாளம் மற்றும் குற்றத்தில் பயன்படுத்தப்பட்ட வாகனங்களின் பதிவு எண்களை அறிய அப்பகுதியிலும் அதைச் சுற்றியும் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

புகாா்தாரா் மற்றும் பிற சாட்சிகளின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், விசாரணை நடந்து வருகிறது என்று காவல் துறை அறிக்கையில் கூறியுள்ளது.

நஜாஃப்கா் துப்பாக்கிச்சூடு வழக்கில் மாநிலங்களுக்கு இடையேயான குற்றவாளி கைது

பகவதியம்மன் கோயில் கல் மண்டபம் சீரமைப்பு: அறநிலையத் துறை நடவடிக்கை எடுக்க உத்தரவு

மானாமதுரை தியாக விநோதப் பெருமாள் கோயிலில் குடமுழுக்கு முகூா்த்தக்கால் நடும் விழா!

இரா. நல்லகண்ணு மறைவு: போடி, ஆண்டிபட்டியில் அமைதி ஊா்வலம்

நெடுஞ்சாலையோரங்களில் குப்பைகள் கொட்டுவதைத் தடுக்கக் கோரிக்கை

SCROLL FOR NEXT