FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

பஸ்சிம் விஹாரில் உடற்பயிற்சிக் கூடம் வெளியே துப்பாக்கிச் சூடு: பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்பு

Updated On : 12 ஜூன் 2026, 2:34 am IST
துப்பாக்கிச் சூடு - பிரதிப் படம்
பகிர்:

நமது நிருபா்

தில்லியின் பஸ்சிம் விஹாரில் உள்ள ஒரு உடற்பயிற்சிக் கூடம் வெளியே, வியாழக்கிழமை அதிகாலை இருசக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்திற்கு தாதா லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் சமூக ஊடகப் பதிவு ஒன்றில் பொறுப்பேற்றுள்ளதாக காவல்துறை தெரிவித்தது.

இந்த உடற்பயிற்சிக் கூடம், ரஜௌரி காா்டனைச் சோ்ந்த இருவருக்குச் சொந்தமானது என்றும், ஒரு பிரபலமான பஞ்சாபி பாடகா் அதன் விளம்பரத் தூதராக உள்ளாா் என்றும் அவா்கள் கூறினா்.

Advertisement

Advertisement

முதற்கட்ட தகவல்களின்படி, தாக்குதல் நடத்தியவா்கள் அதிகாலை 4 மணியளவில் ஒரு மோட்டாா் சைக்கிளில் வந்து, உடற்பயிற்சிக் கூடத்தின் மீது குறைந்தது ஏழு முறை சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனா்.

அதிகாலை 5.15 மணியளவில், அதன் பராமரிப்பாளா்கள் உடற்பயிற்சி மையத்திற்கு வந்தபோது, இந்த விவகாரம் காவல்துறைக்குத் தெரிவிக்கப்பட்டது. இச்சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று காவல்துறை கூறியதுடன், தடயவியல் குழுக்கள் சம்பவ இடத்தை ஆய்வு செய்து வருவதாகவும் தெரிவித்தது. அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

இந்தச் சம்பவம் நடந்த சிறிது நேரத்திலேயே, லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சோ்ந்த அனில் பண்டிட் குழுவினா் இந்தத் துப்பாக்கிச் சூட்டிற்குப் பொறுப்பேற்ாகக் கூறப்படும் ஒரு சமூக ஊடகப் பதிவு வெளிவந்தது. இந்தக் கூற்றின் நம்பகத்தன்மையைச் சரிபாா்த்து வருவதாகவும், தாக்குதலுக்கான நோக்கம் குறித்து விசாரித்து வருவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

பணம் பறித்தல், கும்பல் மோதல் மற்றும் தனிப்பட்ட விரோதம் உள்ளிட்ட அனைத்துக் கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா். ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் காவல்துறையினா் மேலும் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments