FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

அமெரிக்காவின் சியாட்டில் நகரில் துப்பாக்கிச் சூடு! 2 பேர் பலி

அமெரிக்காவின் சியாட்டில் நகரில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி, 5 பேர் காயமடைந்தனர்.

Updated On : 27 ஜூலை 2026, 9:45 am IST
அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு - கோப்புப் படம்
பகிர்:

அமெரிக்காவின் சியாட்டில் நகரில் நடைபெற்ற உணவுத் திருவிழாவில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர், 5 பேர் காயமடைந்தனர் என்று தீயணைப்புத் துறை அதிகாரி தெரிவித்தார்.

அமெரிக்க நேரப்படி, ஞாயிற்றுக்கிழமை மாலை சியாட்டில் நகரில் உள்ள ஸ்பேஸ் நீடில் அருகே உள்ள அரங்கு ஒன்றில் உணவுத் திருவிழா நடைபெற்றுக் கொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத நபர் உள்ளே புகுந்து துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கிறார்.

இதில் இரண்டு பேர் பலியாகினர். ஐந்து பேர் காயமடைந்துள்ளனர்.

Advertisement

Advertisement

இங்கு பல ஆண்டு காலமாக மூன்று நாள்கள் நடைபெறும் உணவுத் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. பல லட்சம் பேர் பங்கேற்கும் இவ்விழாவில், உணவு, குளிர்பானம், சமுதாய நிகழ்ச்சிகள் பலவும் நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டு ஏராளமானோர் உணவுத் திருவிழாவில் கூடியிருந்தபோது இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது. தகவல் அறிந்ததும் விரைந்து வந்த காவல்துறையினர், உடல்களைக் கைப்பற்றி உடல் கூராய்வுக்கு அனுப்பியிருக்கிறார்கள்.

summary

Two people were killed and five others were wounded in a shooting on Sunday evening during a food festival at an events complex near the Space Needle in Seattle, a city fire department spokesperson said.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments