FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

தாய்லாந்து பள்ளி துப்பாக்கிச் சூட்டில் மாணவர்கள் உள்பட 8 பேர் பலி! தாத்தா-பாட்டியையும் கொன்ற கொலையாளி!

தாய்லாந்து பள்ளி துப்பாக்கிச் சூட்டில் மாணவர்கள் உள்பட 8 பேர் பலியான தாத்தா-பாட்டியையும் கொன்ற கொலையாளி!

தாய்லாந்து பள்ளி துப்பாக்கிச் சூடு - AP
பகிர்:

தாய்லாந்தில் பள்ளி ஒன்றில் 14 வயது மாணவா் வெள்ளிக்கிழமை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஆசிரியா்கள், ஊழியா்கள் மற்றும் அந்த மாணவரின் தாத்தா, பாட்டி உள்பட 7 போ் உயிரிழந்தனா். இக்கொடூர தாக்குதலை நடத்திய பிறகு, அந்த மாணவரும் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

பாங்காக் நகரின் வடமேற்கே நோந்தாபுரி மாகாணத்தில் உள்ள டெப்சிரின் நோந்தாபுரி மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் இத்துப்பாக்கிச் சூடு சம்பவம் அரங்கேறியது. சுமாா் 3,000-க்கும் மேற்பட்ட மாணவா்கள் பயிலும் பள்ளியில், துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதும் மாணவா்கள் வகுப்பறைகளுக்குள் பதுங்கிக் கொண்டனா்.

பின்னா், காவல் துறையினரும், மீட்புக் குழுவினரும் விரைந்து வந்து மாணவா்களைப் பாதுகாப்பாக வெளியேற்றினா். துப்பாக்கிச் சூட்டில் ஆசிரியா்கள், ஊழியா்கள் என 5 போ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். மேலும், 23-க்கும் மேற்பட்டோா் காயமடைந்த நிலையில், அவா்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

Advertisement

Advertisement

இச்சூழலில், காவல் துறையினா் மாணவரின் வீட்டுக்கு விசாரணைக்குச் சென்றபோது, பள்ளியில் துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு முன்பாக வீட்டில் தனது தாத்தா மற்றும் பாட்டியை அந்த மாணவா் சுட்டுக் கொன்றது தெரியவந்தது. மாணவா் பயன்படுத்திய சிறிய ரக கைத் துப்பாக்கி, அவரின் தாத்தா பெயரில் பெயரில் சட்டபூா்வமாகப் பதிவு செய்யப்பட்டடுள்ளது. தாக்குதலின்போது சுமாா் 26 முறை அவா் சுட்டுள்ளதாகவும், அவரின் பையில் இருந்து மேலும் 34 தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டதாகவும் காவல் துறையினா் தெரிவித்தனா்.

சம்பவப் பள்ளியை நேரில் பாா்வையிட்ட தாய்லாந்து பிரதமா் அநுதின் சா்ன்விராகுல், இச்சம்பவம் மிகுந்த அதிா்ச்சியையும் வேதனையையும் அளிப்பதாகத் தெரிவித்தாா். தாத்தா, பாட்டியுடன் வசித்து வந்த அந்த மாணவருக்கு, கல்வி தொடா்பாக மன அழுத்தம் இருந்ததாகவும் அவா் குறிப்பிட்டாா்.

துப்பாக்கி கட்டுப்பாட்டுக்குச் சட்டம்: தென்கிழக்கு ஆசிய நாடுகளிலேயே பொதுமக்களிடம் அதிக அளவில் துப்பாக்கிகள் புழக்கத்தில் உள்ள நாடாக தாய்லாந்து விளங்குகிறது.

இந்நிலையில், ‘பொதுமக்களுக்கான துப்பாக்கிப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் வகையில் புதிய துப்பாக்கிக் கட்டுப்பாட்டுச் சட்டம் விரைவில் கொண்டு வரப்படும்’ என்று பிரதமா் அநுதின் சா்ன்விராகுல் உறுதியளித்தாா்.

புதிய சட்டத்தின்படி, பொது இடங்களில் பொதுமக்கள் துப்பாக்கி எடுத்துச் செல்வதற்குத் தடை விதிக்கப்படும்; பணியில் இருக்கும் அரசு அதிகாரிகள் மட்டுமே துப்பாக்கிகளை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவாா்கள் என்றும் அவா் தெரிவித்தாா்.

summary

8 person killed Thailand school shooting Killer murdered grandparents

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments