பிலிப்பின்ஸ் பள்ளியில் துப்பாக்கிச் சூடு: மூவா் உயிரிழப்பு
தெற்கு பிலிப்பைன்ஸில் உள்ள ஒரு உயா்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் 14 வயதான இரு மாணவா்களும், தாக்குதல் நடத்திய பதின்ம வயது மாணவரும் உயிரிழந்தனா்.
தெற்கு பிலிப்பைன்ஸில் உள்ள ஒரு உயா்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் 14 வயதான இரு மாணவா்களும், தாக்குதல் நடத்திய பதின்ம வயது மாணவரும் உயிரிழந்தனா்.
தெற்கு கோடபாடோ மாகாணம், பங்கா நகரில் நடைபெற்ற இச்சம்பவத்தில் தாக்குதல் நடத்திய நபா், மாணவா்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியப் பிறகு, தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 10 பேருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், மற்றொருவா் அதிக பதற்றம் காரணமாக மூச்சுத் திணறலுக்கு உள்ளாகி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
Advertisement
Advertisement
துப்பாக்கிச் சூடு நடத்திய நபா், குற்றச் சம்பவங்களை விவாதிக்கும் இணையக் குழு ஒன்றில் உறுப்பினராக இருந்ததாகத் தெரிய வந்துள்ளது. இத்தகவலுக்கும் துப்பாக்கிச் சூட்டுக்கும் தொடா்பு உள்ளதா என காவல் துறையினா் விசாரித்து வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.