FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

கனடாவில் பஞ்சாபி பாடகரின் வாகனம் மீது துப்பாக்கிச் சூடு!

கனடாவில் பஞ்சாபி பாடகர் அம்மி விர்க்கின் வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது குறித்து...

9 செப்டம்பர் 2026, 5:59 pm IST
பஞ்சாபி பாடகர் அம்மி விர்க் - Instagram
பகிர்:

கனடா நாட்டில் பஞ்சாபி பாடகர் அம்மி விர்க்கின் வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில், கடந்த சனிக்கிழமை (செப். 5) பஞ்சாபி பாடகர் அம்மி விர்க் அங்குள்ள ராஜர்ஸ் ஃபோரம் திடலில் இசைக்கச்சேரி நடத்தினார்.

கச்சேரி முடிந்து அம்மி விர்க் மற்றும் அவரது குழுவினர் பேரணியாகப் புறப்பட்டுச் சென்றனர். அப்போது, திடீரென மற்றொரு வாகனத்தில் வந்த கும்பல் அம்மி விர்க்கின் கார் மீது சரமாரியாகத் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

இந்தத் தாக்குதலில், அந்தக் காரின் மீது 7 துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்ததாகவும், நல்வாய்ப்பாக யாருக்கும் எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கனடா காவல் துறையினர் இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தச் சம்பவம், கனடா மற்றும் இந்தியாவில் வாழும் பஞ்சாபி சமூகத்தினர் இடையே பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ள நிலையில், அம்மி கிரிக்கின் வாகனத்தின் மீது எந்தவொரு தாக்குதலும் நடத்தப்படவில்லை என அவரது தந்தை குல்ஜித் சிங் கூறியுள்ளார்.

இந்தச் சம்பவம் நடைபெற்ற அதேவேளையில் அங்கிருந்து 5 கி.மீ. தொலைவிலுள்ள சன்னிசைட் எனும் இடத்தில் மற்றொரு துப்பாக்கிச் சூடு நடைபெற்றது தெரியவந்துள்ளது. இருப்பினும், அம்மி விர்க் வாகனத்தின் மீது நடத்தப்பட்டதாகக் கூறப்படும் தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

முன்னதாக, பஞ்சாபி பாடகர்கள் மற்றும் நடிகர்களுக்கு எதிரான வன்முறைகள் கடந்த சில ஆண்டுகளாகத் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கடந்த 2022 ஆம் ஆண்டு பஞ்சாபில் பிரபல பாடகர் சித்து மூஸேவாலா சுட்டுக்கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

summary

It has been reported that shots were fired at Punjabi singer Ammy Virk's vehicle in Canada.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments