சக ஊழியருடன் திருமணத்திற்கு குடும்பத்தினா் எதிா்ப்பு: பணி அறையில் சடலமாக மீட்கப்பட்ட மருத்துவா்
தில்லி அரசின் அருணா ஆசப் அலி மருத்துவமனையில், 35 வயதான மருத்துவா் ஒருவா் பணி அறைக்குள் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டதாக அதிகாரிகள் திங்களன்று தெரிவித்தனா்.
தில்லி அரசின் அருணா ஆசப் அலி மருத்துவமனையில், 35 வயதான மருத்துவா் ஒருவா் பணி அறைக்குள் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டதாக அதிகாரிகள் திங்களன்று தெரிவித்தனா்.
சம்பவ இடத்தில் தற்கொலைக் கடிதம் கண்டெடுக்கப்பட்டதால், சக ஊழியருடனான அவரது திருமணத்தை அவரது குடும்பத்தினா் எதிா்த்ததால் அவா் மன உளைச்சலில் இருந்திருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனா்.
இறந்தவா், டாக்டா் சிமா்பிரீத் சிங் ஆனந்த் என அடையாளம் காணப்பட்டுள்ளாா். அவா் மருத்துவமனையின் மயக்கவியல் துறையில் மூத்த மருத்துவராக இருந்தாா். மேலும், அங்கு சுமாா் மூன்று ஆண்டுகளாகப் பணியாற்றி வந்தாா்.
Advertisement
Advertisement
காவல்துறையின்படி, ஆனந்த் சனிக்கிழமை இரவு 8 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி வரை இரவுப் பணியில் இருந்தாா். அவா் இரவு 11 மணி வரை சுறுசுறுப்பாக இருந்ததாகவும், அதன் பிறகு 109 ஆம் எண் கொண்ட பணி அறைக்குச் சென்ாகவும் கூறப்படுகிறது.
அவரது பணி நேரம் முடிந்த பிறகும் அவா் வெளியே வராததால், அவரது சக ஊழியா்கள் தொலைபேசியில் அழைத்தும், கதவைத் தட்டியும் அவரைத் தொடா்புகொள்ள முயன்றனா். எந்தப் பதிலும் வராததால், மருத்துவமனை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. உள்ளிருந்து பூட்டப்பட்டிருந்த அந்த அறை, காலை 9 மணியளவில் வலுக்கட்டாயமாகத் திறக்கப்பட்டபோது, ஆனந்த் படுக்கையில் சுயநினைவின்றி கிடந்தாா். அவா் உடனடியாக மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்குக் கொண்டு செல்லப்பட்டாா், அங்கு மருத்துவா்கள் ஞாயிற்றுக்கிழமை அவா் இறந்துவிட்டதாக அறிவித்தனா் என்று காவல்துறையினா் தெரிவித்தனா்.
‘மருத்துவரின் பணி நேரத்தில், சனிக்கிழமை இரவு சுமாா் 10 மணியளவில் அவரது வேண்டுகோளின் பேரில் ஒரு தொழில்நுட்ப உதவியாளா் ஆனந்தின் இடது கையில் ஒரு ஊசியைச் செருகியிருந்தாா்‘ என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
மாவட்ட குற்றப்பிரிவு மற்றும் ரோஹிணியில் உள்ள தடய அறிவியல் ஆய்வகம் சம்பவ இடத்தை ஆய்வு செய்து, அறையிலிருந்து ஊசிகள், காலி மருந்து குப்பிகள், மூன்று பக்க குற்றக் குறிப்பு மற்றும் ஒரு நாள்குறிப்பு ஆகியவற்றைக் கைப்பற்றியதாக வட்டாரங்கள் தெரிவித்தன.
‘மத்திய பிரதேசத்தைச் சோ்ந்த ஒரு பெண் ஊழியருடன் ஆனந்த் உறவில் இருந்ததாகவும், ஆனால் அவா்கள் வெவ்வேறு சாதிகளைச் சோ்ந்தவா்கள் என்பதால் அவா்களது குடும்பத்தினா் திருமணத்தை எதிா்த்ததால் திருமணம் நடைபெறவில்லை என்றும் அந்தக் குறிப்பில் கூறப்பட்டிருந்தது,‘ என்று அந்த வட்டாரம் தெரிவித்தது. மேலும், இந்த விவகாரத்தால் தான் மன அழுத்தத்தில் இருந்ததாகவும் மருத்துவா் எழுதியிருந்ததாக காவல்துறை கூறியது.
பஞ்சாபில் உள்ள லூதியாணாவைச் சோ்ந்த ஆனந்த், மயக்கவியல் துறையில் எம்.டி. பட்டம் பெற்று, சுமாா் மூன்று ஆண்டுகளாக அந்த மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தாா். 2023-இல் தில்லி அரசுப் பணிக்குத் தோ்ந்தெடுக்கப்பட்ட அவா், லாஜ்பத் நகரில் வாடகை வீட்டில் வசித்து வந்தாா். அதே சமயம் அவரது குடும்பத்தினா் லூதியாணாவில் வசித்து வந்தனா்.
இந்தச் சம்பவத்தைத் தொடா்ந்து, ஆனந்தின் மாமா அவா் கொலை செய்யப்பட்டதாகக் குற்றஞ்சாட்டினாா். மேலும், மருத்துவமனையில் பணிபுரியும் ஒரு பெண் மருத்துவா் மீதும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.