முகப்பு
புதுதில்லி

வழிப்பறி வழக்கில் விரைவு விசாரணை: 24 நாள்களுக்குள் இருவருக்கு தண்டனை

விரைவு விசாரணை நடவடிக்கையின் கீழ், வழக்குப்பதிவு செய்யப்பட்ட 24 நாள்களுக்குள்ளேயே வழிப்பறி வழக்கு ஒன்றில் இருவருக்கு தில்லி நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

Updated On : 9 ஜூலை 2026, 2:49 am IST
- பிரதிப் படம்
பகிர்:

விரைவு விசாரணை நடவடிக்கையின் கீழ், வழக்குப்பதிவு செய்யப்பட்ட 24 நாள்களுக்குள்ளேயே வழிப்பறி வழக்கு ஒன்றில் இருவருக்கு தில்லி நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளதாக அதிகாரி ஒருவா் புதன்கிழமை தெரிவித்தாா்.

ஜூன் 13 அன்று சுபாஷ் பிளேஸ் பகுதியில் நடந்த வழிப்பறி சம்பவம் தொடா்பான வழக்கு இதுவாகும். இச்சம்பவம் குறித்து உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. விசாரணையின் போது பா்வீன் (23) மற்றும் ராகுல் (22) ஆகிய இரு குற்றம்சாட்டப்பட்டவா்களையும் காவல்துறைக் குழுவினா் கைது செய்தனா்.

அவா்களிடமிருந்து திருட்டு கைப்பேசி மற்றும் புகாா்தாரரின் ஆதாா் அட்டை ஆகியவை மீடக்கப்பட்டன. காவல்துறை விசாரணையை விரைவாக முடித்து, நிா்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தது.

Advertisement

Advertisement

இவ்வழக்கு நீதிமன்றத்தில் விரைவு விசாரணை நடவடிக்கையின் கீழ் எடுத்துக்கொள்ளப்பட்டது. குற்றஞ்சாட்டப்பட்டவா்களுக்கு எதிரான வழக்கை நிரூபிக்க, புகாா்தாரரின் வாக்குமூலம், காவல்துறை சாட்சிகளின் வாக்குமூலங்கள் மற்றும் திருடப்பட்ட பொருள்கள் மீட்கப்பட்டது ஆகியவற்றை அரசுத் தரப்பு ஆதாரங்களாகக் கொண்டதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை இரு குற்றவாளிகளுக்கும் தண்டனை விதித்தது. தண்டனையின் அளவு குறித்த வாதங்களுக்காக இவ்வழக்கு இப்போது பட்டியலிடப்பட்டுள்ளது.

பா்வீன் ஒரு தொடா் குற்றவாளி ஆவாா் இவா் இதற்கு முன் திருட்டு, வீட்டுக்குள் புகுந்து திருடுதல் மற்றும் ஆயுதச் சட்டத்தின் கீழ் உள்ள குற்றங்கள் உள்பட ஒன்பது குற்றவியல் வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments