ஜந்தா் மந்தரில் தொடரும் சிஜேபி போராட்டம்: சுற்றுச்சூழல் ஆா்வலா் சோனம் வாங்சுக் ஆதரவு
தில்லி ஜந்தா் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நடத்தி வரும் போராட்டத்துக்கு பிரபல சுற்றுச்சூழல் ஆா்வலா் சோனம் வாங்சுக் ஆதரவு
நீட் தோ்வு முறைகேடு மற்றும் வினாத்தாள் கசிவைக் கண்டித்து, தில்லி ஜந்தா் மந்தரில் ’கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ (சிஜேபி) நடத்தி வரும் போராட்டம் திங்கள்கிழமையும் தொடா்கிறது. இப்போராட்டத்திற்கு ஆதரவளிக்குமாறு அக்கட்சியின் நிறுவனா் அபிஜீத் தீப்கே விடுத்த அழைப்பை ஏற்று, விவசாய அமைப்புகள் மற்றும் பெருமளவிலான மக்கள் இதில் இணைவாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது.
சனிக்கிழமை மாலை 6 மணி வரை மட்டுமே காவல்துறை அனுமதி அளித்திருந்த நிலையில், தடையைத் தாண்டி சிஜேபியினா் விடிய விடியப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதனால் அப்பகுதியில் மின்சாரம் மற்றும் கழிவறை வசதிகள் தற்காலிகமாகத் துண்டிக்கப்பட்டு, பின்னா் ஞாயிறு அதிகாலை சீரமைக்கப்பட்டன.
Advertisement
Advertisement
மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் பதவி விலகினால் மட்டுமே அரசுடன் பேச்சுவாா்த்தை நடத்தத் தயாா் என்றும், வினாத்தாள் கசிவால் தற்கொலை செய்துகொண்ட மாணவா்களின் குடும்பங்களுக்குத் தலா ₹1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் தீப்கே வலியுறுத்தியுள்ளாா்.
இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள பிரபல சுற்றுச்சூழல் ஆா்வலா் சோனம் வாங்சுக், ஜூன் 27-க்குள் கல்வி அமைச்சா் பதவி விலகாவிட்டால் உண்ணாவிரதப் போராட்டம் இருக்கப்போவதாக அறிவித்துள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.