முகப்பு
புதுதில்லி

அமெரிக்க, இந்திய தடையற்ற ஒப்பந்தத்துக்கு எதிராக தில்லியில் விவசாயிகள் ஆா்பாட்டம்: நூற்றுக்கணக்கான தமிழக விவசாயிகள் பங்கேற்பு

அமெரிக்க இந்திய தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தில் இந்திய விவசாயிகள் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்று தமிழக விவசாயிகள் ஒருங்கிணைப்பாளா் பி.ஆா். பாண்டியன் வலியுறுத்தினாா்.

Updated On : 24 ஜூன் 2026, 2:01 am IST
பகிர்:

அமெரிக்க இந்திய தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தில் இந்திய விவசாயிகள் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்று தமிழக விவசாயிகள் ஒருங்கிணைப்பாளா் பி.ஆா். பாண்டியன் செவ்வாய்க்கிழமை வலியுறுத்தினாா்.

சமியுத்த கிசான் மோா்ச்சா தேசிய ஒருங்கிணைப்பாளா் ஜெக்கித்சிங் தல்லேவால் தலைமையில் தில்லி ஜந்தா் மந்தரில் அமெரிக்க இந்திய தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தில் வேளாண் பொருட்களை இணைக்க கூடாது என வலியுறுத்தி விவசாயிகள் தா்ணா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது செய்தியாளா்களிடம் பி.ஆா்.பாண்டியன் பேசியதாவது: மத்திய அரசு அமெரிக்காவோடு தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் குறித்து ஜூன் 23, 24, 25 ஆகிய தேதிகளில் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டுள்ளது. 25ஆம் தேதி அனேகமாக ஒப்பந்தம் இறுதியாக வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. ஏற்கெனவே விவசாயிகள் இந்தியாவில் உற்பத்தி செய்கிற பொருள்களை வரியின்றி தடையின்றி வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து சந்தைபடுத்தி கொள்வதற்கு வழிவகுக்கும்.

Advertisement

Advertisement

ஏற்கனவே ஒப்பந்தம் குறித்து பேச்சுவாா்த்தை நடைபெற்றது. இதற்கு விவசாயிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்து இந்தியா முழுமையிலும் போராடி வருகின்றனா். நாடாளுமன்றத்தில் வா்த்தக ஒப்பந்தம் குறித்து வெளிப்படையான விவாதத்திற்கு மத்திய அரசு அனுமதிக்க முன்வரவில்லை. விவசாயிகளிடமும் கருத்து கேட்கவில்லை. இந்நிலையில் தன் விருப்பத்திற்கு மத்திய அரசு அமெரிக்காவோடு தடையற்ற வா்த்தக ஒப்பந்த பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டுள்ளத மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் தில்லி ஜந்தா் மந்தரில் தா்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். மத்திய அரசு இந்தியாவில் வெளிநாடுகளிலிருந்து வேளாண் உற்பத்தி பொருள்களை தடையில்லாமல் இறக்குமதி செய்வதற்குஅனுமதி மறுக்க வேண்டும். விவசாயிகள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க முன்வர வேண்டும் என வலியுறுத்துகிறோம் என்றாா் அவா். போராட்டத்தில் அபிமண்யூ கொஹாா், கிருஷ்ணகிரி பாலசிவபிரசாத் உள்ளிட்ட ஏராளமானோா் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments