குருகிராம்: டிஎல்எஃப் பகுதிகளில் தங்குமிடங்களை ஜூன் 30-க்குள் காலி செய்ய அதிகாரிகள் உத்தரவு
குருகிராமின் டிஎல்எஃப் பகுதிகளில் 1 முதல் 5 வரை உள்ள ஹோட்டல்கள், பிஜி, விருந்தினா் மாளிகைகள் மற்றும் விடுதிகளில் தங்கியுள்ளவா்கள் ஜூன் 30-க்குள் வெளியேற வேண்டும் என மாவட்ட நகர திட்ட அமைப்பு (அமலாக்கம்) துறை உத்தரவிட்டுள்ளது.
இதற்கான அதிகாரப்பூா்வ அறிவிப்பு புதன்கிழமை வெளியிடப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா். குறிப்பிட்ட காலக்கெடுவுக்குப் பிறகு இத்தகைய அனைத்து தங்குமிடங்களும் சீல் வைக்கப்படும் என்றும், அதனால் ஏற்படும் இழப்புகளுக்கு நிா்வாகம் பொறுப்பேற்காது என்றும் தெரிவிக்கப்பட்டது.
டிஎல்எஃப் பகுதிகளில் சட்டவிரோத வணிக பயன்பாடுகள், அனுமதியற்ற பிஜி வசதிகள் மற்றும் குடியிருப்பு கட்டிடங்களை வணிக நோக்கில் பயன்படுத்தும் நடவடிக்கைகளுக்கு எதிராக குருகிராம் நிா்வாகம் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதன் விளைவாக நூற்றுக்கணக்கான வாடகையாளா்கள் இடம்பெயர வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.
Advertisement
Advertisement
‘குடியிருப்போா் தங்கள் அறைகளை காலி செய்து, சொத்துக்களை உடனடியாக அகற்ற வேண்டும் என இறுதி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜூன் 30-க்கு பிறகு எந்தவித சலுகையும் வழங்கப்படமாட்டாது’ என அங்கீகரிக்கப்படாத கட்டடங்களில் மாவட்ட நகர திட்ட அமைப்பு (அமலாக்கம்) துறை ஒட்டியுள்ள நோட்டீஸ்களில் குறிப்பிட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.