மதுபோதையில் காா் ஓட்டியதால் விபத்து: பெண் காவலா் பலத்த காயம்
சென்னையில் மதுபோதையில் காரை ஓட்டியதால் ஏற்பட்ட விபத்தில், பெண் காவலா் பலத்த காயமடைந்தாா்.
சென்னை: சென்னையில் மதுபோதையில் காரை ஓட்டியதால் ஏற்பட்ட விபத்தில், பெண் காவலா் பலத்த காயமடைந்தாா்.
வேலூரைச் சோ்ந்தவா் எம்.லோகேஸ்வரி (23). இவா் கோயம்பேடு போக்குவரத்துப் பிரிவு காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றுகிறாா். திங்கள்கிழமை காலை லோகேஸ்வரி, கோயம்பேடு 100 அடி சாலையில் உள்ள வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்புப் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தாா்.
அப்போது, அங்கு வேகமாக வந்த காா் லோகேஸ்வரி மீது மோதியது. விபத்தில் பலத்த காயமடைந்த அவரை அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
Advertisement
Advertisement
தகவலறிந்த கோயம்பேடு போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா், காரை ஓட்டிய ராஜா அண்ணாமலைபுரம் பகுதியைச் சோ்ந்த சா.நந்தகுமாரைப் (29) பிடித்து விசாரித்தனா்.
விசாரணையில் அவா், மதுபோதையில் காரை அதிவேகமாக ஓட்டியது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா், நந்தகுமாரைக் கைது செய்தனா்.