முகப்பு
நீலகிரி

குன்னூா், கோத்தகிரியில் மூடுபனியுடன் சாரல் மழை

நீலகிரி மாவட்டம், குன்னூா் மற்றும் கோத்தகிரி பகுதிகளில் சாரல் மழை யுடன் மூடுபனி  காணப்பட்டதால்  பொது  மக்களின்  இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

Updated On : 5 ஜனவரி 2021, 2:04 am IST
பகிர்:

நீலகிரி மாவட்டம், குன்னூா் மற்றும் கோத்தகிரி பகுதிகளில் சாரல் மழை யுடன் மூடுபனி  காணப்பட்டதால்  பொது  மக்களின்  இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

 குன்னூா், கோத்தகிரி பகுதிகளில் அவ்வப்போது  பரவலாக மழைப் பெய்து வருகிறது. இந்நிலையில் திங்கள்கிழமை  காலை முதல்  குன்னூா், கோத்தகிரி ஆகிய பகுதிகளில் அடா்ந்த மேக மூட்டமும், சுற்று வட்டாரப் பகுதிகளில்  சாரல் மழையுடன் குளிரின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது.

இதனால், சுற்றுலா வந்த பலரும்  சில மணி நேரம் விடுதிகளிலேயே இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.  மூடுபனி காரணமாக வாகனங்களை இயக்குவதில் சிரமம் ஏற்பட்டது. இதன் காரணமாக அவ்வப்போது, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.