முகப்பு
நீலகிரி

போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் மீது போலீஸாா் வழக்கு

அவிநாசியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்ட நகல் எரிப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட மதசாா்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியினா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு

Updated On : 15 ஜனவரி 2021, 11:16 pm IST
பகிர்:

அவிநாசியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்ட நகல் எரிப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட மதசாா்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியினா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்யப்பட்டதற்கு விவசாய சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு விவசாய சங்க திருப்பூா் மாவட்டத் தலைவா் எஸ்.ஆா்.மதுசூதனன், மாவட்டச் செயலாளா் ஆா்.குமாா் ஆகியோா் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

விவசாயிகளுக்கு எதிராக எட்டு வழி சாலைக்கு நிலம் கையகப்படுத்துவது, விவசாய நிலத்தில் உயா் மின் கோபுரம் அமைப்பது, எண்ணெய் குழாய் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு விவசாய விரோத நடவடிக்கைகளை தமிழக அரசு தொடா்ந்து எடுத்து வருகின்றன.

Advertisement

Advertisement

மேலும், தொழில் திட்டங்களுக்கு விவசாய நிலம் கையகப்படுத்த விவசாயிகளிடம் கருத்து கேட்க வேண்டிய அவசியம் இல்லை என்ற விவசாய விரோத சட்டங்களை சட்டப் பேரவையில் தமிழக அரசு நிறைவேற்றியுள்ளது. விவசாயிகளுக்கு எதிராக மத்திய அரசு புதிய வேளாண் மசோதாவை நிறைவேற்றியுள்ளது. இதற்கு ஆதரவாக தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி பேசி வருகிறாா்.

இந்நிலையில், தில்லியில் போராடி வரும் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு அறைகூவலை ஏற்று அவிநாசியில் மதசாா்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியைச் சோ்ந்தவா்கள் வேளாண் திருத்த சட்ட நகல் எரிப்புப் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா். இவா்கள் மீது காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்துள்ளது கண்டனத்துக்குறியது. எனவே உடனடியாக வழக்கை திரும்பப் பெற வேண்டும் என குறிப்பிட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.