முகப்பு
நூல் அரங்கம்

தண்ணீர் வளமும் கண்ணீர்த்துளியும்

தண்ணீர் வளமும் கண்ணீர்த்துளியும் - ஆர்.நல்லகண்ணு; பக்.200; ரூ.190;  பத்மா பதிப்பகம், ப.எண்.21/10, லோகநாதன் நகர், இரண்டாம் தெரு, சூளைமேடு, சென்னை-94.

Updated On : 4 மார்ச் 2019, 1:10 am IST
பகிர்:

தண்ணீர் வளமும் கண்ணீர்த்துளியும் - ஆர்.நல்லகண்ணு; பக்.200; ரூ.190;  பத்மா பதிப்பகம், ப.எண்.21/10, லோகநாதன் நகர், இரண்டாம் தெரு, சூளைமேடு, சென்னை-94.

தமிழகத்தின் நீராதாரம் குறித்த கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல்.  நூலின் முதல் கட்டுரையான "தமிழ்நாட்டின் வறட்சியைப் போக்கும் வழி' கட்டுரையிலேயே நீராதாரத்தைப் பெருக்க ஏரி, குளங்களை ஆழப்படுத்துவது, மழைக்காலங்களில் ஆறுகளிலிருந்து வீணாகப் போய்ச் சேரும் தண்ணீரைப் பயன்படுத்துவது, காடுகளைப் பாதுகாப்பது,  நதிகளை இணைப்பது என பலவழிகள் கூறப்பட்டுள்ளன.  இந்தக் கட்டுரையின் விரிவாகவே இந்நூலின் பிறகட்டுரைகள் அமைந்துள்ளன.  கங்கை - காவிரி இணைப்பு,  சேது கங்கா இணைப்பு, முல்லைப் பெரியாறு பிரச்னை என பல நீராதாரப் பிரச்னைகளைப் பற்றி விரிவாகப் பேசும் கட்டுரைகள் இதில் அடங்கியுள்ளன. 

1977 ஆம் ஆண்டு நவம்பர் 11 இல்  வீசிய  புயல்  நாகப்பட்டினம், வேளாங்கண்ணியில் தொடங்கி,  தஞ்சைமாவட்டங்களின் பலபகுதிகளைத் தாக்கி கடுமையான பாதிப்புகளை எற்படுத்தியது.  அவற்றால் ஏற்பட்ட சேதத்தைப் பற்றிய "வெள்ளமும் புயலும்' கட்டுரை,  சமீபத்தில் தஞ்சை, நாகை மாவட்டங்களைத் தாக்கிய  புயலை நினைவுபடுத்துவதாக உள்ளது.

Advertisement

Advertisement

2012 - ஆம் ஆண்டின்  "தேசிய தண்ணீர்க் கொள்கை', நாட்டின் அனைத்து நீர்நிலைகளையும், நிலத்தடி நீர்ப்பிடிப்புப் பகுதிகளையும், நீர் வினியோகத்தையும் நீர்ப் பாதுகாப்பையும் அரசின் பொறுப்பிலிருந்து தனியாருக்குத் தாரை  வார்த்துவிட மறைமுகமான திட்டமே;  மக்களின் அடிப்படை உயிர் ஆதாரமான தண்ணீர்,  கொக்கோ கோலா, பெப்சி, யுனிலிவர், மக்கின்சே போன்ற பன்னாட்டுக் கம்பெனிகளின் ஆதிக்கத்துக்குச் சென்றுவிடும்  ஆபத்துக்கு அது வழிவகுக்கும் என்று ஒரு கட்டுரை சுட்டிக்காட்டுகிறது.   நீராதாரத்தைப் பாதுகாக்க வேண்டியதன் தேவையை வலியுறுத்தும் கட்டுரைகள் அடங்கிய  சிறந்த நூல். 

வைணவமும் வைணவத் திருத்தலங்களும் - எஸ்.ஸ்ரீகுமார்; பக்.448; ரூ.420;  ஸ்ரீ செண்பகா பதிப்பகம், சென்னை-17;   044 - 2433 1510.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments