திருவள்ளுவர் இறைநெறி
உலகப் பொதுமறையாகப் போற்றப்படும் திருக்குறள் வாழும் வழிகள், வீடுபேற்றுக்கான நெறிகளை உலகம் முழுமைக்கும் கொடையாகத் தந்தது.
திருவள்ளுவர் இறைநெறி - பேராசிரியர் அரங்க. இராமலிங்கம்; பக். 112; ரூ. 80; ஜோதி பதிப்பகம், 2/1067, 11-ஆவது தெரு, 2-ஆவது குறுக்குத் தெரு, சென்னை-600 037.
உலகப் பொதுமறையாகப் போற்றப்படும் திருக்குறள் வாழும் வழிகள், வீடுபேற்றுக்கான நெறிகளை உலகம் முழுமைக்கும் கொடையாகத் தந்தது.
திருக்குறளை இறைநோக்கில் தரிசிப்பதற்கு வழிகாட்டியுள்ளார் நூலாசிரியர். திருக்குறளில் சமயம் சார்ந்த 69 சிந்தனைகளை வரிசைப்படுத்தி உள்ளார். இறைவனுக்குரிய பெயர்களான ஆதி (குறள் 1), பகவன் (குறள் 2), இறைவன் என்ற சொல் வரும் குறள்கள் (5, 10), தெய்வம் என்ற சொல் வரும் குறள்கள் (43, 50, 55, 619, 702, 1023) உள்ளன.
Advertisement
Advertisement
இறைவனுக்குரிய பண்புகளாக வாலறிவன் (தூய ஒளி பொருந்திய அறிவாக இருப்பவன்) குறள் 2, மலர்மிசை ஏகியவன் குறள் 3, வேண்டுதல் வேண்டாமை இல்லாதவன் குறள் 4, இருள்சேர் இருவினையும் சேராதவன் குறள் 5, பொறிவாயில் ஐந்தவித்தவன் குறள் 6, தனக்குவமை இல்லாதவன் குறள் 7, அறவாழி அந்தணன் (அறத்திற்கு தலைவன்) குறள் 8, எண்குணத்தான் குறள் 91, பற்றற்றவன் குறள் 350.
மேலும், சமயம் என்றால் என்ன?, இறைவன், தெய்வம், கடவுள் என்போர் யார்?, வானுலகம், புத்தேள் உலகம், வீட்டுலகம், நரகம் எது?, பூதம், பேய், கூற்று (எமன்), எத்தன்மையன?, ஊழ், பிறப்பு, இறப்பு, என்பன எத்தகையன?, மெய்யுணர்தல் எப்படி?, வேள்வி என்பது யாது?, உயிரின் ரகசியம் என்ன?, திருவடி எது?, எந்த வடிவில் உள்ளது?, அதைப் பற்றுவது எங்ஙனம்? முதலான பல்வேறு கேள்விகளை எழுப்பி, அவற்றுக்கான பதிலைத் திருக்குறளில் இருந்தே நுண்ணிய வகைகளில் ஆய்ந்து தந்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.