முகப்பு
நூல் அரங்கம்

கருத்து மலர்கள்

இளைய தலைமுறையினர் வாசித்து சஞ்சீவியை அறிந்து கொள்வதற்கான நல்லதொரு நூல்.

Updated On : 26 மே 2026, 1:20 pm IST
பகிர்:

கருத்து மலர்கள்: பேராசிரியர் ந. சஞ்சீவி 100 - தொகுப்பும் பதிப்பும் - எழிலரசி பாலசுப்பிரமணியன்; பக். 286; ரூ. 300; காவ்யா, சென்னை - 600 024; ✆ 98404 80232.

பேராசிரியர் ந. சஞ்சீவியின் நூற்றாண்டையொட்டி அவருடைய கருத்து மலர்களை மகள் எழிலரசி பாலசுப்பிரமணியன் நூலாகத் தொகுத்துள்ளார். இவர் பேராசிரியராகப் பணிபுரிந்தபோது, 1974-79-ஆண்டு காலகட்டத்தில் கல்லூரி மாணவர்கள் - ஆசிரியர்களின் வருகைப் பதிவேடு அருகே எழுதிவைத்திருந்தவற்றை நூலாக்கியுள்ளார்.

இலக்கியம், இலக்கணம், வரலாறு, அரசியல், பயணம், ஆங்கில இலக்கணம், மொழிபெயர்ப்பு, அறிவியல், ஆன்மிகம், ஆளுமைகளின் கருத்துகள் எனப் பல்வேறு துறைகள் பற்றிய ந. சஞ்சீவியின் ஆயிரக்கணக்கான கருத்துகளை, நூறு நூல்களைப் படித்து அறிய வேண்டியவற்றை ஒற்றை நூலில் நமக்குக் கிடைக்கச் செய்துள்ளார்.

Advertisement

Advertisement

ஒன்றாய் இருக்கும் இரண்டு தமிழர்களை நான்காம் படை வேலை செய்தாவது பிரிப்பதே மூன்றாம் தமிழனின் முதல் வேலை, ஆளை மாற்றுவதைவிட அமைப்பை மாற்றுவதே முக்கியம், ஊழல்கள் ஒழியவும் உயர்வுகள் ஓங்கவும், சமநிலை உணர்வு பெற்ற சான்றோனுக்கு இகழ்ச்சியுமில்லை;

புகழ்ச்சியுமில்லை, மோனத்தால் விளையும் ஞானம்; ஞானத்தால் விளையும் மோனம் என நூல் நெடுகிலும் பட்டுக் கத்தரித்தாற்போல எண்ணற்ற நறுக்குகள்.

நாம் அறிய வேண்டியதென்ன இருக்கிறது என்ற இறுமாப்பே அழிவின் ஆரம்பம், எனக்குத் தமிழ்க் கோலத்திலும் தவக்கோலம் இனிது, சிலவாகுக, சிறப்பாகுக, சிலவே சிறப்பு தன்னுடைய எழுத்துகளிலும் பேச்சுகளின் ஊடேயும் தான் நினைத்தவற்றை, கருதியவற்றை, சிந்தித்தவற்றைத் துண்டுகளாகத் தெளித்துச் சென்றிருக்கிறார் ந. சஞ்சீவி.

இளைய தலைமுறையினர் வாசித்து சஞ்சீவியை அறிந்து கொள்வதற்கான நல்லதொரு நூல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.