முகப்பு
நூல் அரங்கம்

ஞானியார் அடிகள்

ஞானியார் அடிகளின் தமிழ்த்தொண்டு, சமயப் பணி, அருள்பணி, கல்விப் பணி என அவரின் சிறப்புகளை அனைவரும் அறிந்து கொள்ள இந்த நூல் உதவும்.

Updated On : 15 ஜூன் 2026, 6:03 pm IST
பகிர்:

ஞானியார் அடிகள்- சுந்தரசண்முகனார்; பக். 152; ரூ. 175; மணிவாசகர் பதிப்பகம், சென்னை- 600 021, ✆ 93805 30884.

தெய்வநெறி தழைத்து வளரும் மாநிலம் தமிழ்நாடு. திருமூலர், சம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர், காரைக்கால் அம்மையார், ராமலிங்க அடிகளார் எனப் பலரும் தெய்வநெறி வளர்த்தனர்.

அந்த வரிசையில்,இருபதாம் நூற்றாண்டில், திருப்பாதிரிப்புலியூரில் சைவமும், தமிழும் தழைக்க தவத்திரு ஞானியார் அடிகள் செங்கோலோச்சினார். ஞானத்தின் திருவுருவாகத் திகழ்ந்த ஞானியார் அடிகளின் பெருமைகள், சிறப்புகள், வாழ்க்கைப் பயணம், மாணவர்களுக்கு அவர் ஆற்றிய தொண்டு, சமயம் சார்ந்த பணிகள் என பல அரிய தகவல்களை இந்த நூல் எடுத்துரைக்கிறது.

Advertisement

Advertisement

பன்மொழி வித்தகரான பழனி எனும் இயற்பெயர் கொண்ட ஞானியார் அடிகள் திருப்பாதிரிப்புலியூர் மடாலயத்தின் ஐந்தாம் பட்டம் ஆவார். இளமைப்பருவத்திலேயே மடாலயப் பொறுப்பேற்ற இவர், தான் பெற்ற கல்வியை மாணவர்களுக்குப் போதித்ததுடன் சமயப் பணியும் செய்தார். கலைமகள் கழகம், சைவ சித்தாந்த சபை உள்ளிட்ட பல்வேறு கழகங்களையும் உருவாக்கி உரையாற்றியுள்ளார். தமிழ்நாடு முழுவதும் சென்று சமயத் திருப்பணி செய்ததுடன் சிறந்த சொற்பொழிவுகளையும் ஆற்றியுள்ளார்.

ஞானியார் அடிகளாரின் இரட்டுற மொழிதல் பேச்சும், அதன் தொகுப்பும் நூலை வாசிப்போருக்கு உற்சாகத்தை தரும். ஞானியார் அடிகளின் தமிழ்த்தொண்டு, சமயப் பணி, அருள்பணி, கல்விப் பணி என அவரின் சிறப்புகளை அனைவரும் அறிந்து கொள்ள இந்த நூல் உதவும்.

ஐந்தாம் பட்டத்து ஞானியார் அடிகள் 1942-ஆம் ஆண்டு தை மாதம் பூசம் நட்சத்திர நாளில் இறுதி எய்தியதால், அது முதல் ஆண்டுதோறும் தைப்பூச நாளில் அவரது நினைவு நாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.