முகப்பு
பெரம்பலூர்

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்க தேர்வு முகாம்

பெரம்பலூர் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்க ஒன்றிய அளவிலான பயனாளிகள் தேர்வு

Updated On : 22 ஆகஸ்ட் 2013, 1:02 pm IST
பகிர்:

பெரம்பலூர் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்க ஒன்றிய அளவிலான பயனாளிகள் தேர்வு முகாம் மற்றும் மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் ஆக. 24-ம் தேதி தொடங்குகிறது என்றார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது.

இதுகுறித்து அவர் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பெரம்பலூர் மாவட்டத்தில், சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து உதவி உபகரணங்கள் வழங்க பயனாளிகள் தேர்வு முகாம் ஒன்றிய அளவில் நடைபெற உள்ளது. ஆக. 24-ம் தேதி பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியம் துறைமங்கலம் டி.இ.எல்.சி நடுநிலைப் பள்ளியிலும், 31-ம் தேதி வேப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியிலும், செப். 7-ம் தேதி ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியம், பாடாலூர் அரசு மேல்நிலைப் பள்ளியிலும், 14-ம் தேதி வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியம், வெங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியிலும் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது.

Advertisement

Advertisement

முகாமில் மாற்றுத் திறனாளிகளுக்கு தேவையான உபகரணங்கள் வழங்க பயனாளிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர். பங்கேற்க விரும்புவோர் குடும்ப அட்டை, காப்பீட்டு அட்டை மற்றும் அதனுடைய நகல்கள், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, பிறப்புச் சான்று (6 வயதுக்குள்பட்டோர்) உள்ளிட்ட ஆவணங்களை கொண்டு வர வேண்டும். மேலும் விவரங்களுக்கு, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் 04328- 225474, 9443660340, 9042521640, அனைவருக்கும் கல்வி இயக்கம் (பெரம்பலூர்) 9788858827, வேப்பூர் - 9788858825, ஆலத்தூர் -9788858829, வேப்பந்தட்டை- 9788858826, புதுவாழ்வு திட்டம் 9443520361 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

இத்துடன் மாற்றுத் திறனாளிகளுக்கான மருத்துவ முகாமும் நடைபெற உள்ளது. எனவே, 18 வயதுக்குள்பட்ட அனைத்து வகையான மாற்றுத்திறன் மாணவ, மாணவிகள், குழந்தைகள் அனைவரும் பங்கேற்று, அரசு சலுகைகளை பெற்று பயனடைய வேண்டும். இதுவரை தேசிய அடையாள அட்டை பெறாத அனைத்து மாற்றுத் திறனாளி குழந்தைகளும் சிறப்பு முகாம் மூலமாக அடையாள அட்டை பெற்றுக்கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments