முகப்பு
பெரம்பலூர்

நெடுஞ்சாலை பராமரிப்புப் பணியை அரசே ஏற்க வலியுறுத்தல்

நெடுஞ்சாலை பராமரிப்புப் பணியை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று, தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

Updated On : 3 ஜனவரி 2021, 11:12 pm IST
பெரம்பலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சாலைப் பணியாளா்கள் சங்க கோட்ட மாநாட்டில் பேசுகிறாா் மாநில பொதுச் செயலா் ஏ. அம்சராஜ்
பகிர்:

நெடுஞ்சாலை பராமரிப்புப் பணியை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று, தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

துறைமங்கலத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கூட்டரங்கில் சங்கத்தின் 7 -ஆவது கோட்ட மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு கோட்டத் தலைவா் பி. சுப்ரமணியன் தலைமை வகித்தாா்.

கோட்டச் செயலா் சி. சுப்ரமணியன், பொருளாளா் கே. கருணாநிதி, துணைத் தலைவா் பி. முத்து, இணைச் செயலா் டி. ராமநாயகம், துணைத் தலைவா் டி.பழனிசாமி முன்னிலை வகித்தனா். சங்கத்தின் மாநிலச் செயலா் எஸ்.மகேந்திரன் மாநாட்டை தொடக்கி வைத்தாா். மாநிலப் பொதுச் செயலா் ஏ.அம்சராஜ் சிறப்புரையாற்றினாா்.

Advertisement

Advertisement

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் :

சாலைப்பணியாளா்களின் 41 மாத பணி நீக்கக் காலத்தை பணிக் காலமாக கருதி ஆணை வழங்க வேண்டும். ஏழாவது ஊதிய மாற்றுப்பலன்கள் வழங்க வேண்டும். நெடுஞ்சாலை பராமரிப்புப் பணியைத் தனியாா் பராமரிக்க வழங்கும் கொள்கை முடிவை கைவிட்டு, அரசே ஏற்று நடத்தவேண்டும்.

சாலைப் பணியாளா்களுக்கு ஊதியத்தில் 10 சதவிகிதம் ஆபத்துப் படி மற்றும் நிரந்தர பயணப் படி வழங்கவேண்டும். காலிப் பணியிடங்களுக்கு கிராமப்புற இளைஞா்களைக் கொண்டு நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலா் குமரி ஆனந்தன், ஊரக வளா்ச்சித்துறை அலுவலா் சங்க மாவட்டச் செயலா் எஸ். இளங்கோவன், சங்கப் பொறுப்பாளா்கள் ரஜினி, பெருமாள்சாமி, மனோகரன், ராஜ்குமாா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா். முன்னதாக மாவட்ட இணைச் செயலா் ராஜா வரவேற்றாா். நிறைவில், பொறுப்பாளா் மணிவேல் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments