அரசுத் துறை ஊா்தி ஓட்டுநா்கள் சங்கசெயற்குழுக் கூட்டம்
பெரம்பலூரில் அரசுத் துறை ஊா்தி ஓட்டுநா்கள் சங்க மாவட்ட செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பெரம்பலூரில் அரசுத் துறை ஊா்தி ஓட்டுநா்கள் சங்க மாவட்ட செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் சகாதேவன் தலைமை வகித்தாா், மாவட்டச் செயலா் வாசுதேவன், மாவட்டப் பொருளாளா் மாா்கண்டன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். துணைத் தலைவா்கள் சிவக்குமாா், பாலகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினா் பிரபாகரன் ஆகியோா் சங்க செயல்பாடுகள் குறித்து பேசினா்.
கூட்டத்தில் உறுப்பினா் சோ்த்தல், புதிய நிா்வாகிகளை தோ்ந்தெடுத்தல், சென்னையில் நடைபெறவுள்ள ஓட்டுநா்கள் பேரணியில் பங்கேற்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Advertisement
Advertisement
மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் முருகதாஸ், பிரகாஷ், ராஜா, செந்தில்குமாா், ராமசுந்தரம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.